Home சினிமா கோலிவுட் மங்காத்தா வெற்றிக்கு விருந்து கொடுத்த விஜய்!

மங்காத்தா வெற்றிக்கு விருந்து கொடுத்த விஜய்!

293
0
Thalapathy Vijay Watching Mankatha Movie

Thalapathy Vijay; மங்காத்தா வெற்றிக்கு விருந்து கொடுத்த விஜய்! தல அஜித்தின் மங்காத்தா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடிகர் விஜய் தன்னை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

மங்காத்தா படத்தின் வெற்றிக்கு தளபதி விஜய் தனக்கு விருந்து கொடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தல அஜித் நடிப்பில், கடந்த 2011 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் மங்காத்தா.

இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, மகத், அர்ஜூன், லட்சுமி ராய், வைபவ், ஆண்ட்ரியா, பிரேம்ஜி, அஞ்சலி ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு, மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் உடன் நேரலையில் கலந்துரையாடினார்.

அப்போது, விஜய் பற்றி வெங்கட் பிரபு கூறியிருப்பதாவது, சிவகாசி படத்தில் விஜய்யுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன். மங்காத்தா படம் முடிந்தவுடன், வீட்டிற்கு அழைத்து பெரிய விருந்து கொடுத்தார். ஏனென்றால், மங்காத்தா படம் அவருக்கு, ரொம்பவும் பிடித்திருந்தது.

விருந்து முடிந்த உடன் அவருடன் நிறைய பேசினேன். அவரும் நிறைய விவாதித்தார். கதை தயாரானவுடன் எப்போது வேண்டுமானாலும், வாருங்கள் புதிய படம் பண்ணுவோம் என்றார். விரைவில், நல்ல கதையுடன் அவரை சந்திக்க காத்திருக்கிறேன்.

விஜய்யுடன் இணைந்து வித்தியாசமான ஒரு புதிய படம் பண்ண வேண்டும் என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

Previous articleகொரோனா பரவலை கட்டுபடுத்தும் பொருட்டு ஜூலை 9 முதல் கடுமையான கொரோனா ஊரடங்கு: கொல்கத்தா
Next articleஇரண்டு சுகாதார நிலையங்கள் கொரோனா மருத்துவமனைகளாக மாற்றம்: சென்னை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here