Home சினிமா இந்திய சினிமா விக்ரம், விஜய், சூர்யா வச்சு வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் விக்ரமன்!

விக்ரம், விஜய், சூர்யா வச்சு வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் விக்ரமன்!

0
503

HBD Vikraman; விஜய்யின் வெற்றிக்கு வித்திட்ட இயக்குநர் விக்ரமன் பர்த்டே டுடே! புது வசந்தம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்ரமன் இன்று தனது 56ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

விக்ரமன் பிறந்தநாள்

விக்ரமன் இன்று தனது 56 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் (Happy Birthday Vikraman Sir…).

பார்த்திபனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் இயக்குநர் விக்ரமன். பார்த்திபன் இயக்கி நடித்த படம் புதிய பாதை. இப்படத்தின் மூலம் பார்த்திபன் இயக்குநராக அறிமுகமானார்.

கடந்த 1989 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்தப் படத்தில் தான் விக்ரமன் பார்த்திபனிடம் உதவியாளராக பணியாற்றினார்.

வெறும் 38 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் ரூ.2 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது என்கிறது விக்கிப்பீடியா தகவல்.

விக்ரமன் படங்கள்

இப்படத்திற்குப் பிறகு 1990 ஆம் ஆண்டு புது வசந்தம் என்ற படத்தை விக்ரமன் கொடுத்தார். இப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார்.

முரளி, ஆனந்த் பாபு, ராஜா, சார்லி, சித்தாரா, சுரேஷ் என்று பல நட்சத்திரங்களை கொண்டு திரைக்கு வந்த இந்தப் படம், சிறந்த இயக்குநருக்கான தமிழ்நாடு மாநில விருது, சிறந்த படத்திற்கான தமிழ்நாடு மாநில விருது, சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விருது என்று குவித்தது.

இப்படத்தைத் தொடர்ந்து பெரும்புள்ளி, நான் பேச நினைப்பதெல்லாம், கோகுலம், புதிய மன்னர்கள் என்று பல படங்களை கொடுத்தார்.

பூவே உனக்காக

எனினும், விஜய்யை வைத்து பூவே உனக்காக படத்தை கொடுத்தார். பூவே உனக்காக விஜய்க்கு வெற்றி படமாக அமைந்தது. அதோடு, அவருக்கு திருப்பு முனையாகவும் இருந்தது.

பூவே உனக்காக தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்ய வம்சம்

இதே போன்று சரத்குமாரின் சூர்ய வம்சம் படத்தை இயக்கினார். இந்தப் படமும் தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

அதோடு, சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, சிறந்த இயக்குனர்க்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது ஆகிய விருதுகளை விக்ரமனுக்கு பெற்றுக் கொடுத்தது.

தொடர்ந்து உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தைப் போல, உன்னை நினைத்து, பிரியமான தோழி, சென்னை காதல், மரியாதை, நினைத்தது யாரோ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இவரது படங்கள் எல்லாமே ஹிட் படங்களாகவே அமைந்துள்ளது. விஜய், ஜெயராம், முரளி, சரத்குமார், விக்ரம், கார்த்திக், விஜயகாந்த், சூர்யா, மாதவன் ஆகிய நட்சத்திரங்களுக்கு சிறந்த படங்களையே கொடுத்து தன்னை வெற்றி இயக்குநராக நிலை நிறுத்திக் கொண்டார்.

2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு விக்ரமன் எந்தப் படங்களையும் இயக்கவில்லை. இவரது படங்களுக்காக ஏங்காத ரசிகர்கள் இல்லை.

தொடர்ந்து இன்னும் ஏராளமான வெற்றிப் படங்களை அவர் இயக்க வேண்டும் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இவரது படங்கள், இனிமையான பாடல்களுக்கும், குடும்பப் பாங்கான கதைகளுக்கும், காட்சி அமைப்புகளுக்கும் கச்சிதமாகவே பொருந்தியிருந்தது. தற்போது தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவராக விக்ரமன் இருக்கிறார்.

இந்த நிலையில் இன்று தனது 56 ஆவது பிறந்தநாளை விக்ரமன் கொண்டாடுகிறார். சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மிஸ்டர் புயல் சார்பாக நாமும் விக்ரமனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம். ஹேப்பி பர்த்டே விக்ரமன் சார்… Happy Birthday Vikraman Sir…

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here