Home சினிமா கோலிவுட் பின்னணி பாடகிகளை ஓவர்டேக் செய்ய முயற்சி எடுக்கும் ராஷி கண்ணா!

பின்னணி பாடகிகளை ஓவர்டேக் செய்ய முயற்சி எடுக்கும் ராஷி கண்ணா!

525
0
Raashi Khanna Singing

Raashi Khanna Singing Song; பின்னணி பாடகிகளை ஓவர்டேக் செய்ய முயற்சி எடுக்கும் ராஷி கண்ணா! ஊரடங்கு உத்தரவில் வீட்டிலேயே இருக்கும் நடிகை ராஷி கண்ணா பாடகியாக அவதாரம் எடுப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

ராஷி கண்ணா பாடகியாக அவதாரம் எடுக்க அவர் பாடல் பாடி வருகிறார்.

மெட்ராஸ் கஃபே என்ற பாலிவுட் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்தார்.

தெலுங்கு சினிமாவில் Oohalu Gusagusalade என்ற படத்தின் மூலம் அறிமுகமானர். இப்படத்திற்கு சிறந்த அறிமுக நடிகைக்கான SIIMA Award for Best Debut Actress – Telugu விருது பெற்றார்.

அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் உச்சநட்சத்திரமாக திகழ்ந்தார். இந்த நிலையில், தமிழ் சினிமாவில் நயன்தாரா, அதர்வா ஆகியோரது நடிப்பில் வந்த இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதையடுத்து, ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷாலின் அயோக்யா, விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு பெற்று தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தினார்.

தற்போது சைத்தான் கா பச்சா மற்றும் அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சினிமா படப்பிடிப்புகள் உள்பட அனைத்துமே ரத்து செய்யப்பட்டு, முடக்கப்பட்டு அனைவருமே வீட்டில் முடங்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தற்போது பிரபலங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் ஒவ்வொருவரும் அவர்களது வீட்டிலேயே வித்தியாசமான டாஸ்க்குகள் செய்து வருகின்றனர்.

உடற்பயிற்சி, யோகா, ஓவியம், சமையல் என்று பிஸியாக இருக்கின்றனர். அந்த வகையில், நடிகை ராஷி கண்ணா தான் ஒரு நடிகை என்பதையும் தாண்டி புதிய முயற்சியாக பாடகி அவதாரம் எடுத்துள்ளார்.

வீட்டில் இருந்தபடி பாடல் திறமையை வளர்த்து வருகிறார். இது குறித்து பாடல் பாடும் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous article5 Rs Doctor: 5 ரூபா டாக்டர எங்கப்பா? விமர்சனத்திற்கு உள்ளாகும் தளபதி விஜய்!
Next articleவிக்ரம், விஜய், சூர்யா வச்சு வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் விக்ரமன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here