Divya Sathyaraj; குழந்தைகளுக்கு இரும்புச்சத்து குறைபாடு இருப்பதால் அவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அரசுக்கு கடிதம் எழுதிய நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா Divya Sathyaraj.
கொரோனா வைரஸ் காலத்தில் பிரபலங்கள் பலரும் விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது, அரசுக்கு நிதியுதவி வழங்குவது என்று தங்களால் முடிந்த உதவிகளை அரசுக்கு செய்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசுப் பள்ளிகளில் ஒரு கணக்கெடுப்பு நடத்தியுள்ளார்.
அவர் மேற்கொண்ட கணக்கெடுப்பில் 40 சதவிகிதம் பெண் குழந்தைகள் மற்றும் 38 சதவிகித ஆண் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், அவர்களுக்கு இரும்புச் சத்துமிக்க உணவுகளை கொடுக்க இயலாது.
ஆதலால், பள்ளிகளுக்குச் செல்லும் வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு இரும்புச் சத்துமிக்க உணவுகளை இலவசமாக வழங்க வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
மேலும், இரும்புச்சத்து குறைபாடு ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பதால், மாநிலத்தில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இதையும் ஒன்றாக எடுக்குமாறு திவ்யா அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.