Home சினிமா கோலிவுட் பெண் இயக்குநர் கவலைக்கிடம்: கொரோனா வைரஸா?

பெண் இயக்குநர் கவலைக்கிடம்: கொரோனா வைரஸா?

195
0
Sanjana Reddy

Sanjana Reddy; பெண் இயக்குநர் கவலைக்கிடம்: கொரோனா வைரஸா? ராஜூ காடு என்ற தெலுங்கு படத்தை இயக்கிய சஞ்சனா ரெட்டி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பெண் இயக்குநர் சஞ்சனா உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

தெலுங்கு சினிமாவில் ஒரு சில படங்களை இயக்கியவர் பெண் இயக்குநர் சஞ்சனா ரெட்டி. ராம் கோபால் வர்மாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். ராஜூ காடு என்ற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமாகியுள்ளார்.

இந்தப் படத்தில் ராஜ் தருண் மற்றும் அமைரா தஸ்தூர் ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்கும் போட்டியில் பதக்கம் வென்ற கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தை கோனா வெங்கட் தயாரிக்கிறார். இந்த நிலையில், திடீரென்று சஞ்சனா ரெட்டிக்கு தீவிரமாக காய்ச்சல் அடித்துள்ளது.

இதனால், வீட்டிலேயே மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் உடனிருந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஆனால், உண்மையில், சஞ்சனா ரெட்டி டயட் காரணமாக திரவ உணவுகளை மட்டுமே கடந்த 3 நாட்களாக எடுத்து வந்துள்ளார். இதன் காரணமாகவே அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.

எனினும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், வெண்டிலேட்டர் வசதியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

சஞ்சனா ரெட்டிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து மருத்துவர்கள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous article10ஆம் வகுப்பு தேர்வுகள் இரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது
Next articleகுண்டாவில் சமையல் செய்த சூர்யா: வைரலாகும் புகைப்படம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here