Home சினிமா கோலிவுட் ஜிவி பிரகாஷ் பீஜிஎம்: வைரலாகும் சூர்யாவின் மாறா தீம் பாடல்!

ஜிவி பிரகாஷ் பீஜிஎம்: வைரலாகும் சூர்யாவின் மாறா தீம் பாடல்!

311
0
Suriya Maara Theme

Suriya Maara Theme Soorarai Pottru; சூரரைப் போற்று படத்தில் ஜிவி பிரகாஷ் இசையில், சூர்யா மாறா தீம் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் அவர் பாடிய மாறா தீம் பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ். இப்படத்தைத் தொடர்ந்து ஏராளமான படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தற்போது சூரரைப் போற்று படத்திற்கு இசையமைத்துள்ளார். இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாக்கப்பட்ட படம் சூரரைப் போற்று.

கொரோனா லாக்டவுன் காரணமாக சூரரைப் போற்று படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியாக இருந்த படம் தற்போது தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஹலோவில் GVPrakashBGM என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இந்த ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் சூரரைப் போற்று படத்தில் சூர்யா பாடிய மாறா தீம் பாடலான பருந்தாகுது ஊர்க்குருவி வணங்காதது என் பிறவி..அடங்கா பல மடங்காவுறேன் தடுத்தா அத ஒடச்சி வருவேன் என்ற பாடலை பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

மேலும், ஜிவி பிரகாஷ் பாடிய பாடல்களையும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleகொரோன நோய் தொற்று – தமிழகம் சாதனை
Next articleதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு ? தமிழக அரசு முடிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here