Home சினிமா கோலிவுட் மாஸ்டர் குட்டி ஸ்டோரி ஸ்டைலில் ஹர்பஜன் சிங் டுவிட்!

மாஸ்டர் குட்டி ஸ்டோரி ஸ்டைலில் ஹர்பஜன் சிங் டுவிட்!

381
0

Harbhajan Singh Kutty Story; மாஸ்டர் குட்டி ஸ்டோரி ஸ்டைலில் ஹர்பஜன் சிங் டுவிட்! கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்கள் ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஹர்பஜன் சிங் மாஸ்டர் விஜய் குட்டி ஸ்டோரி ஸ்டைலில் டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஹர்பஜன் சிங் குட்டி ஸ்டோரி ஸ்டைலில் புதிய டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு உலக மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்து வருகின்றனர்.

சீனாவில் தொடங்கி 100 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 15 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை கொரோனாவால் 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்கு பிரதமர் மோடி 21 நாட்களுக்கு ஊரங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பலரும் ஆதரவு தெரிவித்து வீடியோ பதிவிட்டு வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரரும், நடிகருமான ஹர்பஜன் சிங் டுவிட் பதிவிட்டுள்ளார்.

மாஸ்டர் விஜய் குட்டி ஸ்டோரி ஸ்டைலில் ஹர்பஜன் சிங் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், Let me tweet a குட்டிstory,Pay attention listen2 தடைகளை உடைச்சு WorldCup, Oscarன்னு வாங்கின நமக்கு, கண்ணுக்குத் தெரியாத Corona ஒரு சவால்.

இதை 21daysoflockdown ல் ஜெய்ச்சு உலகத்துக்கு முன்னாடி கெத்தா காலரதூக்குரதுக்காக StayAtHomeSaveLives என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Harbhajan Singh Tweet

பாலிவுட் படங்களில் நடித்து வந்த ஹர்பஜன் சிங் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் டிக்கிலோனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்தைத் தொடர்ந்து ப்ரண்ட்ஷிப் படத்தின் மூலம் ஹீரோவாகவும் நடிக்கிறார். இந்தப் படத்தில், ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக பிக் பாஸ் லோஸ்லியா நடிக்கிறார்.

ஜான் பால்ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ப்ரண்ட்ஷிப் படத்தில் அர்ஜூன், சதீஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். அண்மையில், இப்படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here