Home சினிமா கோலிவுட் முடிவை மாற்றிய தாராள பிரபு படக்குழு: புதிய அறிவிப்பு வெளியீடு!

முடிவை மாற்றிய தாராள பிரபு படக்குழு: புதிய அறிவிப்பு வெளியீடு!

0
419
Dharala Prabhu Release in Amazon Prime

Dharala Prabhu; முடிவை மாற்றிய தாராள பிரபு படக்குழு: புதிய அறிவிப்பு வெளியீடு! ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தாராள பிரபு படத்தை அமேசான் பிரைமில் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தாராள பிரபு (Dharala Prabhu) படம் திரைக்கு வந்து சில நாட்கள் ஓடிய நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பாலிவுட்டில் வெளியான விக்கி டோனர் படத்தின் தமிழ் ரீமேக்காக தாராள பிரபு உருவாக்கப்பட்டது. இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இந்தப் படத்தை இயக்கினார்.

கடந்த மார்ச் 13 ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வந்தது. ஆனால், திரைக்கு வந்து சில நாட்கள் மட்டுமே ஓடிய நிலையில், கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன.

இதனால், தாராள பிரபு படத்தின் வசூல் பாதித்தது. ஹரிஷ் கல்யாண், விவேக், தான்யா ஹோப் ஆகியோரது நடிப்பில் திரைக்கு வந்த இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

ஆதலால், தாராள பிரபு படத்தை மறுவெளியீடு (Dharala Prabhu ReRelease) செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. இது குறித்து, படக்குழு அறிக்கையும் வெளியிட்டது.

அதில், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற தாராள பிரபு படம் திரையரங்கம் திறக்கப்பட்டதும் மறுவெளியீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மறுவெளியீட்டிற்கு முன்பாகவே தாராள பிரபு படத்தை படக்குழுவினர் அமேசான் பிரைமில் வரும் 9 ஆம் தேதி நாளை (Dharala Prabhu Release in Amazon Prime Video) வெளியிட இருக்கிறார்கள்.

இதனால், தாராள பிரபு மீண்டும் திரைக்கு வராது என்று கூறப்படுகிறது. இதே போன்று ஜீவா, நடாஷா சிங் நடிப்பில் வந்த ஜிப்ஸி படமும் மறுவெளியீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here