Soori; எப்போதுமே சூரி கொஞ்சம் வித்தியாசமான ஆள்தான்! இப்படி செஞ்சிட்டாரே! தனது ஹோட்டலில் பணிபுரியும் 350 ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய லீவு கொடுத்துள்ளார்.
தனது ஹோட்டலில் பணியாற்றி வரும் 350 ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய லீவு கொடுத்து அசத்தியுள்ளார் நடிகர் சூரி.
கடந்த 2017 ஆம் ஆண்டு மதுரையில் காமராஜ் சாலையில் அம்மன் என்ற ஹோட்டலை சூரி திறந்தார்.
இதையடுத்து, மதுரையின் மாட்டுத்தாவணி, ஒத்தக்கடை ஆகிய பகுதிகளிலும் ஹோட்டல்களை திறந்து வைத்தார்.
தொடர்ந்து சைவ உணவகங்களை மட்டுமே திறந்து நடத்தி வந்த சூரி, மதுரை திருப்பரங்குன்றத்தில் அம்மன் உணவகம் என்ற அசைவ உணவகத்தை திறந்தார். இந்த உணவகத்தை நடிகரும், சூரியின் நண்பருமான சிவகார்த்திகேயன் திறந்து வைத்தார். இவ்வளவு ஏன், நடிகர் விஜய் சேதுபதி கூட சூரியின் ஹோட்டலுக்கு சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில், கொரோனா காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தனது ஹோட்டல்களில் பணியாற்றி வரும் 350 ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய லீவு கொடுத்து வீட்டிற்கு அனுப்பியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், எனது ஹோட்டல்களில் மொத்தம் 350 பேர் வேலை செய்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் லீவு கொடுத்துவிட்டேன்.
அதோடு, அவர்களது சம்பளத்தில் எந்த பிடித்தவும் செய்யாமல், முழு சம்பளத்தையும் அவர்களுக்கு கொடுத்துவிட்டேன்.
இதே போன்று வறுமையில் வாடும் நாடக நடிககர்களுக்கு நடிகர் சங்கம் மூலமாக ரூ.1 லட்சம் கொடுத்திருக்கிறேன். நாட்டில் மூன்றாம் உலகப்போர் வந்தது போன்ற ஒரு அச்சத்தை கொரோனா ஏற்படுத்திவிட்டது.
ஆதலால், யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.