Home சினிமா கோலிவுட் டுவிட்டரில் நம்பர் ஒன் இடத்தில் தல: #HBDDearestThalaAJITH கொண்டாடும் ரசிகர்கள்!

டுவிட்டரில் நம்பர் ஒன் இடத்தில் தல: #HBDDearestThalaAJITH கொண்டாடும் ரசிகர்கள்!

311
0
HBD Thala Ajith

Thala Ajith; தல அஜித்தின் 49 ஆவது பிறந்தநாளை கொண்டாட #HBDDearestThalaAJITH என்கிற ஹேஷ்டேகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தல அஜித்தின் பிறந்தநாளைம் முன்னிட்டு #HBDDearestThalaAJITH என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

தல அஜித் நாளை மே 1 ஆம் தேதி தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு டுவிட்ட்டரில், #HBDAjith #HBDDearestThalaAJITH #Valimai ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தனது பிறந்தநாளை புகைப்படங்கள், வீடியோ பதிவிட்டு யாரும் கொண்டாட வேண்டாம் என்று அஜித் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார்.

எனினும், அதையெல்லாம் பெரிது படுத்தாமல், அஜித் டுவிட்டர் ஹேஷ்டேக்கை உலகம் முழுவதும் டிரெண்டாக்கும் நோக்கத்தில் தல அஜித் ரசிகர்கள் #HBDDearestThalaAJITH அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இது குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, கரோனா என்கிற கொடிய நோயின் தாக்கத்தில், அகில உலகமே போராடிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்துக்கும் எந்தவிதமான விளம்பரமும் செய்ய வேண்டாம் என்று

எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரைக் கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்தோடு முடிவெடுத்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதுவரை தனித்திருப்போம், நம் நலம் காப்போம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைந்ததோடு இல்லாமல், வருத்தமடைந்துள்ளனர்.

இதற்கு முன்னதாக அஜித்தும் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார். மேலும், புகைப்படங்களையும் பதிவிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

இதன் காரணமாக அஜித் ரசிகர்கள் தொடர்ந்து வருத்தமடைந்துள்ளனர். எனினும், அஜித் பற்றிய தகவல்கள், படங்கள், பாடல்கள் ஆகியவற்றை அவரது ரசிகர்கள் ஹலோவில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருந்த வலிமை படம் கொரோனா காரணமாக 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleபிக் பாஸ் தமிழ் 4 ஆவது சீசனில் குக் வித் கோமாளி ரம்யா பாண்டியன்!
Next articleஇதை மட்டும் செய்தாலே நல்ல உடற்பயிற்சி தான்: வைரலாகும் அஞ்சலி வீடியோ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here