Home சினிமா கோலிவுட் வெளிநாடு சென்ற விஜய்க்கு கொரோனா தொற்றா? சுகாதாரத்துறை கிடுக்குப்பிடி!

வெளிநாடு சென்ற விஜய்க்கு கொரோனா தொற்றா? சுகாதாரத்துறை கிடுக்குப்பிடி!

0
5264

Vijay Corona Virus: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விஜய் வீட்டிற்கு சென்று கிடுக்குபிடி விசாரணை செய்துள்ளனர்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விஜய் வீட்டிற்கு சென்று அங்கு கிருமி நாசினி தெளித்துவிட்ட வந்ததாக தகவல் வந்துள்ளது. ஆனால் விஜய்யை காணவில்லை.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தியாவிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

வெளிநாட்டிற்கு சென்று வந்தவர்கள் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும், அவர்கள் தனியாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே வெளிநாட்டிற்கு சென்று வந்தவர்கள் பட்டியலில் சினிமா பிரபலங்களான பிரபு தேவா, விஜய், ரம்பா, கௌதமி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு அதிகாரிகள் சென்றுள்ளனர். ஆனால், அவர் கடந்த 6 மாதங்களாக வெளிநாடு எங்கும் செல்லவில்லை என்று அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், மாஸ்டர் படப்பிடிப்பை முடித்த கையோடு, விஜய் மாஸ்க் உடன் சென்னை விமான நிலையத்தில் நடந்து செல்லும் புகைப்படம் வந்தது.

அதன் பிறகு மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்கு முன்னதாக அவர் சென்னை திரும்பியதாகவும் தகவல் வந்தது.

ஆனால் விஜய் வீட்டில் இருந்தவர்கள் விஜய் வெளிநாடு செல்லவில்லை எனக்கூறியுள்ளனர். ஆனால் அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதில் அவர் வெளிமாநிலத்திற்கே விமானத்தில் சென்றுவந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, விஜய் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர் என்ற கொரோனா எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்படவில்லை. மாறாக, அங்கு கிருமி நாசினி மட்டும் தெளித்துள்ளனர்.

ஏற்கனவே விஜய் கொரோனா விழிப்புணர்வு வீடியோவோ, கொரோனா குறித்து பதிவோ எதுவும் வெளியிடவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி கேட்டை திறந்து செல்வது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here