Hiphop Tamizha Adhi; உங்களுக்கு வைரஸ் இருக்குனு நினைச்சுக்கோங்க: ஹிப்ஹாப் ஆதி! கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடிகர் ஹிப் ஹாப் ஆதி டுவிட்டரில் வீடியோ பதிவிட்டுள்ளார்.
உலகத்தையே அச்சுறுத்தி வருவது கொரோனா வைரஸ்தான். நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை எளிதில் தொற்றக்கூடிய ஒரு வகை வைரஸ் கிருமிதான் இந்த கொரோனா வைரஸ்.
சீனாவில் ஆரம்பித்து தற்போது இந்தியாவின் பல மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் ஆதி டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், ஆமாம், COVID 19 கொரோனா வைரஸ் ஒரு அச்சுறுத்தல் தான். இந்தியாவின் பொருளாதாரம் மட்டுமல்ல, உலக நாடுகளின் பொருளாதாரமும் அடிவாங்கியிருக்கிறது.
ஆனாலும் 15 நாட்கள் அனைத்தையும் மூடுங்கள் என்று அரசு அறிவிப்பதற்கு என்ன காரணம். இதற்கு என்ன காரணம் என்று கேட்டால், இந்த கொரோனா வைரஸ்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
அப்போ நிலவேம்பு எதற்கு என்று கேட்டால், அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனாவை உங்கள் அருகில் நெருங்கவிடாமல் இருப்பதற்குதான்.
இது எல்லாமே பாதுகாப்பு நடவடிக்கை மட்டுமேதவிர, இதுவரை கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆனால், பயங்கர பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
ஆனால், வெளியில் யாரும் செல்ல வேண்டாம். ஒருவேளை நீங்கள் வெளியில் சென்று, கொரோனா உங்களை தாக்கிவிட்டால், அது உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கும். ஆகையால், கவனமாக இருக்க வேண்டும்.
உங்களுக்கு வைரஸ் இருப்பதைப் போன்று நடந்து கொள்ளுங்கள். அதுவே இப்போதைய சூழ்நிலையில், சிறந்த தந்திரம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.