Suriya Corona Virus Awareness; மோடியால் சூர்யா ஏமாற்றமா? மக்களை பாதுகாக்க வரும் 22 ஆம் தேதி அவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் மற்றும் பேஸ்மாஸ்க் கொடுக்க இருந்த சூர்யா, பிரதமர் மோடியின் அறிவிப்பால் ஏமாற்றமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் (Corona Virus) இந்தியாவிலும் பரவி வருகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக, திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. சினிமா படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சினிமா பிரபலங்கள் வீடியோக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் சூர்யா, வரும் 22 ஆம் தேதி கொரோனா வைரஸ் (Corona Virus) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், துண்டு பிரசுரங்கள் மற்றும் பேஸ்க் மாஸ்க் ஆகியவை விநியோகம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
கோயம்பேடு, எழும்பூர், சென்ட்ரல் ஆகிய இடங்கள் உள்பட சென்னையின் முக்கியமான 10 இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டிருந்தார்.
ஆனால், பிரதமர் மோடி நேற்று ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, வரும் 22 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று அறிவித்தார்.
ஆனால், இந்த அறிவிப்பு ஒருநாளுக்கு மட்டுமா? இல்லை அதே நிலை அடுத்தடுத்த நாட்கள் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனினும், இந்த திடீர் அறிவிப்பால் தற்போது சூர்யா ஏமாற்றமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சூர்யா இதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.