கமலுக்கு கொரோனா வைரஸ்? கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று அறிகுறி காரணமாக சென்னை மாநகராட்சி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பல நாடுகளுக்குப் பரவி பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்து பல லட்சம் மக்களை பாதித்து வருகிறது.
பல அரசாங்ககள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளை அதிக பாதிப்புக்கு உள்ளாகியது.
இந்தியா பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் மோடி அறிவித்த 21 நாள் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் ஏப்ரல் 15-ம் தேதி வரை மக்கள் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்து இளவரசர், பிரிட்டன் பிரதமர், கன்னடா பிரதமரின் மனைவி, ஜேம்ஸ்பாண்ட் படம் நடிகர் போன்றவர்களை இந்த கொரோனா தொற்று தற்போது தாக்கியுள்ளது.
கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று
கமலாஹாசன் தன்னை தானே தனிமை படுத்திக்கொண்டதாக சில தினங்களுக்கு முன் அறிவித்து இருந்தார். தற்பொழுது அவர் வெளிநாட்டு சென்றதாகவும் அதில் அவருக்கு கொரோனா பாதித்ததாகவும் சமூக ஊடங்களில் செய்திகள் பரவி வருகிறது.
கமலஹாசனுக்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவரை ஏப்ரல் 6-ஆம் தேதி வரை தனிமையில் இருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியது.
கமல் வீட்டில் கொரோனா தொற்று உள்ளது என்ற நோட்டிஸ் சுவரில் ஓட்டப்பட்டது. இது திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கமல் தன்னை தானே தனிமைப் படுத்தினார். சமூக வலைத்தளத்தில் கமலுக்கு கொரோனா செய்தி, மாநகராட்சி அறிவுறுத்தல்… இவை அனைத்தையும் பார்த்தால் உண்மையில் கமலுக்கு கொரோனா பாதிப்போ என திரை உலகினர் சற்று அதிர்ச்சியில் உள்ளனர்.