Deprecated: ltrim(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/u899037853/domains/mrpuyal.com/public_html/wp-content/plugins/wp-seo-multilingual/classes/class-wpml-wpseo-redirection.php on line 24

Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/u899037853/domains/mrpuyal.com/public_html/wp-content/plugins/sitepress-multilingual-cms/classes/class-wpml-file.php on line 56

Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/u899037853/domains/mrpuyal.com/public_html/wp-content/plugins/sitepress-multilingual-cms/classes/class-wpml-file.php on line 56
சூது கவ்வும் பார்ட் 2 விரைவில் வருமா? யார் சொன்னது? | Mr Puyal
Home சினிமா கோலிவுட் சூது கவ்வும் பார்ட் 2 விரைவில் வருமா? யார் சொன்னது?

சூது கவ்வும் பார்ட் 2 விரைவில் வருமா? யார் சொன்னது?

0
307
Soodhu Kavvum 2 Soon

சூது கவ்வும் பார்ட் 2 விரைவில் வருமா? யார் சொன்னது? விஜய் சேதுபதி நடிப்பில் வந்த சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

சூது கவ்வும் 2 படம் விரைவில் உருவாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

பீட்சா, தெகிடி, இன்று நேற்று நாளை, சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட பல படங்களை திருகுமரன் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சார்பில் சிவி குமார் தயாரித்திருந்தார்.

தற்போது, டைட்டானிக், காதலும் கவுந்து போகும், 4ஜி ஆகிய படங்களை தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது லாக்டவுனில் வீட்டிலேயே இருக்கும் சிவி குமார் தனது சமூக வலைதள பக்கத்தில், எனது தயாரிப்பில் வந்த படங்களில் உங்களுக்கு எந்த படத்தின் 2ம் பாகம் வேண்டும் என்று கேட்டிருந்தார்.

அதில், தெகிடி, சூதுகவ்வும், மாயவன் ஆகிய படங்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

இதில் கிட்டத்தட்ட 62% பேர் சூது கவ்வும் படத்திற்கும், 26% தெகிடி படத்திற்கும் 12% மாயவன் படத்திற்கும் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

சூது கவ்வும் படத்தில், விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், கருணாகரன் ஆகியோர் நடித்திருந்தனர்.

சூது கவ்வும் 2 பாகம் குறித்து இயக்குநர் நலன் குமாராசாமி கூறுகையில், என்னிடம் அதிரடி மசாலா வகையில் ஒரு படமும், ஸ்போர்ட்ஸ் டிராமா வகையில் ஒரு படமும் இருக்கிறது. சூது கவ்வும் 2 ஆம் பாகம் எதிர்காலத்தில் நடக்கும் என்று நம்பிகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக சூது கவ்வும் 2 விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது விஜய் சேதுபதி கடைசி விவசாயி, உப்பெனா, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், புஷ்பா, துக்ளக் தர்பார், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் பிஸியாக இருக்கிறார்.

இந்தப் படங்கள் திரைக்கு வந்த பிறகு சூது கவ்வும் 2 ஆம் பாகம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்தப் படத்தில் விஜய் சேதுபதிதான் நடிப்பார் என்பது குறித்து படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகே தெரியவரும்.

Soothu Kavvum 2 Soon

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here