Dhanush ஜகமே தந்திரம் மே 1ல் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் வரும் மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, சுள்ளான், புதுப்பேட்டை, பொல்லாதவன், யாரடி நீ மோகினி, மாப்பிள்ளை, 3, மாரி, மாரி 2, அசுரன் என்று வரிசையாக பல படங்களில் நடித்தார்.
அசுரன் படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த எனை நோக்கி பாயும் தோட்டம் வெளிவந்து ஓரளவு விமர்சனம் பெற்றது.
ஜகமே தந்திரம் (Jagame Thandhiram)
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் பட்டாஸ். தற்போது, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் Jagame Thandhiram என்ற படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
ஜகமே தந்திரம் படத்தில், தனுஷுடன் இணைந்து சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லெட்சுமி, கலையரசன், சின்னி ஜெயந்த் ஆகியோர் உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இதுவரை ஜகமே தந்திரம் குறித்து அறிவிப்பு வெளியாகாத நிலையில், முதல் முறையாக இப்படம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.
ஜகமே தந்திரம் ரிலீஸ் தேதி
அதன்படி, வரும் மே 1 ஆம் தேதி ஜகமே தந்திரம் திரைக்கு வருகிறது. அன்று, ஜெயம் ரவியின் பூமி, சூர்யாவின் சூரரைப் போற்று, விஷாலின் சக்ரா ஆகிய படங்கள் வெளியாக இருக்கிறது.
மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினம் ஒருபுறம் இருக்க அன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதனை முன்னிட்டு முன்னணி நடிகர்களின் படங்கள் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கர்ணன் என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
கிட்டத்தட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது. விரைல், கர்ணன் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.