Home சினிமா கோலிவுட் பத்திரிக்கையாளரான வரலட்சுமி சரத்குமார்!

பத்திரிக்கையாளரான வரலட்சுமி சரத்குமார்!

261
0
Velvet Nagaram Sneak Peek

Velvet Nagaram வெல்வெட் நகரம் படத்தில் வரலட்சுமி சரத்குமார் பத்திரிக்கையாளராக நடித்துள்ளார். இப்படம் வரும் 6 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வந்த போடா போடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தைத் தொடர்ந்து, தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, சண்டக்கோழி 2, சர்கார், மாரி 2, நீயா 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழைத் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

ராஜபார்வை

இந்த நிலையில், தற்போது ராஜபார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். அதிலும், கண்பார்வை தெரியாத ஒருவராக நடித்து வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இந்த டிரைலரில், ஒரு புறம் பல ரௌடிகளை புரட்டி எடுத்து, உடற்பயிற்சியும் செய்கிறார் வரலட்சுமி சரத்குமார். மற்றொரு புறம் போலீசார் யாரை தேடிக்கொண்டிருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.

Varalaxmi Sarathkumar கண்பார்வையற்ற கதாபாத்திரம்

இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார் கண்பார்வையற்றவராக நடித்துள்ளார். முழுக்க முழுக்க த்ரில்லர் கதையை மையப்படுத்திய இப்படத்திற்கு அதிகளவில் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வந்த சைக்கோ படத்தில் உதயநிதி ஸ்டாலின் கண்பார்வையற்றவராக நடித்து ஹீரோயினை சைக்கோவிடமிருந்து காப்பாற்றுவார்.

தற்போது அதே போன்ற ஒரு கதாபாத்திரத்தில்தான் வரலட்சுமி சரத்குமாரும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜபார்வை படத்தில் வரலட்சுமி சரத்குமாருடன் இணைந்து ரவி கலே, பரத் ரெட்டி, சுமித்ரா, தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

ஜேகே இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ரவி பஸ்ரூர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். விரைவில் இந்தப் படம் திரைக்கு வருகிறது.

வெல்வெட் நகரம் Velvet Nagaram Sneak Peek

அதற்கு முன்னதாக வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வெல்வெட் நகரம் (Velvet Nagaram) வரும் 6 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

அறிமுக இயக்குநர் மனோஜ் வெல்வெட் நகரம் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார் பத்திரிக்கையாளராக நடித்துள்ளார்.

ஹீரோயினை மையப்படுத்தி இந்த படம் சைக்லாஜிக்கல் த்ரில்லர் கதையை சித்தரிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானலில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேக்கர்ஸ் ஸ்டூடியோ நிறுவனத்தின் மூலம் அருண் கார்த்திக் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். கோலி சோடா 2 புகழ் அச்சு ராஜாமணி இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமாருடன் இணைந்து ரமேஷ் திலக், நடிகை கஸ்தூரி, மாளவிகா சுந்தர், பிரகாஷ் ராகவன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

வரும் 6 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், வெல்வெட் நகரம் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleஜெமினி மேம்பாலம் குண்டுவெடிப்பு; சென்னையில் பதற்றம்
Next articleDhanush: ஜகமே தந்திரம் மே 1ல் ரிலீஸ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here