Home சினிமா கோலிவுட் பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜூனியர் என்டிஆர் பர்த்டே டுடே!

பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜூனியர் என்டிஆர் பர்த்டே டுடே!

283
0
Jr NTR Birthday

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஜூனியர் என்டிஆர் பர்த்டே டுடே! பிரம்மாஷ்ரி விஸ்வாமித்ரா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜூனியர் என் டி ஆர் இன்று தனது 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஜூனியர் என் டி ஆர் பிறந்த நாள் இன்று.

கடந்த 1993 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தவர் ராம ராவ் ஜூனியர் (ஜூனியர் என்டிஆர்). இவரது தந்தை நடிகரும், அரசியல் பிரபலமுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணன். தாயார் ஷாலினி பாஸ்கர் ராவ்.

இவரது தாத்தா, ஆந்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் என்.டி.ராம ராவ். ஹைதராபாத்தில் பள்ளிப் படிப்பை முடித்த ஜூனியர் என் டிஆர், குச்சிப்புடி நடனம் கற்றுக்கொண்டுள்ளார்.

பிரம்மாஷ்ரி விஸ்வாமித்ரா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் ஜூனியர் என் டி ஆர்.

கடந்த 1996 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ராமாயணம் படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால், இந்தப் படத்தில், ராமாவாக நடித்தார்.

இதுவரை 28 படங்களில் நடித்துள்ள ஜூனியர் என் டிஆர், இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வந்த Yamadonga என்ற படத்திற்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றார்.

இதே போன்று Nannaku Prematho என்ற படத்திற்கும் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றார். மேலும், நந்தி விருதும் பெற்றார்.

தற்போது இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் RRR (ரௌத்திரம் ரணம் ருத்திரம்) படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் ஜூனியர் என் டி ஆருடன் இணைந்து ராம் சரண், அலியா பட், அஜய் தேவ்கன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

கிட்டத்தட்ட ரூ.400 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது. பாகுபலி படத்தைப் போன்று இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

நடிகரோடு மட்டுமல்லாமல், பின்னணி பாடகராகவும் திகழ்கிறார். ஆம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் ஒரு சில பாடல்கள் பாடியுள்ளார்.

தொலைக்காட்சியிலும் வலம் வந்துள்ளார். இவரது 13 ஆவது வயதில், ஈடிவி தெலுங்கு சேனலில் ஒளிபரப்பான பக்தா மார்கண்டேயா என்ற தொடரில் நடித்தார்.

அதே போன்று ஸ்டார் மா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தெலுங்கு முதல் சீசனை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஜூனியர் என் டி ஆர் இன்று தனது 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என்று பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

SOURCER SIVAKUMAR
Previous articleகாதல் பிரேக்கப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்!
Next articleஇன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து வெளியேறிய பிரியா வாரியர்: இதோ வெளியான காரணம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here