Home சினிமா கோலிவுட் காதல் பிரேக்கப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்!

காதல் பிரேக்கப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்!

0
306
Priya Bhavani Shankar Love Break Up

காதல் பிரேக்கப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பிரியா பவானி சங்கருக்கு காதல் தோல்வி ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி வருகிறது.

பிரியா பவானி சங்கருக்கு காதல் தோல்வி ஏற்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி வருகிறது.

மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இப்படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வந்த கடைக்குட்டி சங்கம் படத்தில் நடித்தார்.

மேலும், மான்ஸ்டர், மாஃபியா சேப்டர் 1 ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம், கசட தபற, பொம்மை, வான், இந்தியன் 2, அஹம் பிரம்மாஸ்மி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியா பவானி சங்கர் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

சித்ரா பௌர்ணமி இரவு!

போன வருஷம் இதே நாள், ‘கிரிவலம் போனா, மூனு மாசத்துல வேண்டிக்கிட்டத கடவுள் கண்டிப்பா குடுப்பார்’னு friend சொன்னத நம்பி மனசு நிறைய ஒரே வேண்டுதல சுமந்துகிட்டு இரவோட இரவா பௌர்ணமிய தொரத்திக்கிட்டு திருவண்ணாமலை போனேன்.

கடவுள் கேட்டத குடுக்கலனாலும் பரவாயில்லை கிழித்து என் முகத்துலயே எறிந்து கை தட்டி சிரித்தார் ஒரு வருஷம் எப்படி போச்சுன்னே தெரியல.

மனிதர்களையும் அவர் குணங்களையும் நாம் பிடிவாதமாக பார்க்க மறுத்த கோணத்தில் காலம் காட்டியது. ரெண்டு சித்ரா பௌர்ணமிக்கு இடையே வாழ்க்கை மட்டுமில்ல உலகமே மாறிடுச்சு.

நான் மட்டும் இல்ல, உலகமே தனிமையில். ஏனோ கிடைத்த கைகளை பற்றிக்கொண்டு கிடைத்த தோளில் ஒட்டிக்கொண்டு அவசரவசரமாக அடுத்த வாழ்க்கைக்கு தயாராக இந்த தனிமை தூண்டவில்லை.

தனிமையில் நிற்க நமக்கு ஏன் இவ்வளவு பயம்? பதற்றம்? கேட்டதை தராமல் நல்லதை தந்த கடவுள் மேலயும் சித்ரா பௌர்ணமி மேலயும் கோவம் குறைஞ்சு தனிமையின் வெளிச்சத்தில் நிதானமாக தெளிவாக, எந்த எதிர்ப்பும் இன்றி, கிடைத்ததே என்று எந்த பிடிப்புமின்றி நான்.

கிரிவலம் போகாமல், முன் எப்பொழுதையும் விட அமைதியாக தனிமையின் கம்பீரத்தோடு என் வீட்டு மாடியில் சித்ரா பௌர்ணமி.

மாற்றங்கள் தரும் வலிகள் பழகக்கூடும்

வலித்து மரத்து அடங்கிய பின் வரும் தெளிவு அழகு என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பதிவைப் பார்த்த பலரும், நடிகை பிரியா பவானி சங்கர் தனது நீண்டநாள் காதலரான ராஜை பிரிந்துவிட்டார் என்று செய்தி வெளியானது.

இந்த நிலையில், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், மறைமுகமாக அப்படி ஏதும் இல்லை என்று கூறுவது போன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றொரு பதிவு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: அதில் தொலைபேசியைப் பார்த்துச் சிரிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, நம்மைப் பற்றிய வதந்திகளை நாமே படிக்கும்போது என்று குறிப்பிட்டு தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இது காதல் தோல்வி என்பது குறித்து வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் பிரியா பவானி சங்கர் பதிவிட்ட கருத்து என்று பலரும் கூறியுள்ளனர்.

பிரியா பவானி சங்கரும், ராஜூம் காதலித்து வருவதாகவும், இருவரது குடும்பத்தினரும் நட்பு பாராட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதை வைத்து பார்க்கும் பொழுது விரைவில் நடிகை பிரியா பவானி சங்கர் திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here