Vishnu Vishal; விஷ்ணு விஷால் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜூவாலா கட்டா! விஷ்ணு விஷாலின் 36ஆவது பிறந்தநாளுக்கு அவரது காதலி ஜூவாலா கட்டா சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.
தனது பிறந்தநாளை கொண்டாடிய விஷ்ணு விஷாலுக்கு காதலி ஜூவாலா கட்டா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
விஷ்ணு விஷால் அறிமுகமான முதல் படம் வெண்ணிலா கபடி குழு. சினிமாவில் அறிமுகமாகிய பிறகு விஷால் என்ற தனது பெயரை விஷ்ணு விஷால் என்று மாற்றிக் கொண்டார்.
தொடர்ந்து குள்ளநரி கூட்டம், இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் என்று பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது காடன், ஆரண்யா, ஜகஜால கில்லாடி, எப்.ஐ.ஆர். ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இவர் பிரபல இயக்குநரும், நடிகருமான நட்ராஜின் மகள் ரஜனியை காதலித்து கடந்து 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் இருக்கிறான். இந்த நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இதையடுத்து, விஷ்ணு விஷாலும், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் நெருங்கி பழகினர். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியானது.
விஷ்ணு விஷாலை காதலிப்பது உண்மை தான். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் ஜுவாலா கட்டா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், விஷ்ணு விஷால் இன்று தனது 36 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பேட்மிண்டன் வீராங்கனையும், விஷ்ணு விஷாலின் காதலியுமான ஜூவாலா கட்டா, தனது டுவிட்டர் பக்கத்தில் ஹேப்பி பர்த்டே பேபி. எப்போதும் பிரகாசித்துக் கொண்டே இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விஷ்ணு விஷாலை நேரில் சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், எஃப்.ஐ.ஆர். படத்தின் ஒரு வீடியோவை பதிவிட்டு யார் இந்த இர்பான் அகமது என்று கேள்வி கேட்கும் வீடியோவையும் பதிவிட்டுள்ளார். அது, எஃப்.ஐ.ஆர். படத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர்.
எஃப்.ஐ.ஆர். படத்தில் விஷ்ணு விஷாலின் கதாபாத்திரத்தை சொல்லும் வீடியோவை ஜூவாலா கட்டா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.