Home சினிமா கோலிவுட் ஜோஷுவா வில்லன் யார் தெரியுமா? பாரிஸ்ல பிட்னெஸ் பயிற்சி எடுத்த வருண்!

ஜோஷுவா வில்லன் யார் தெரியுமா? பாரிஸ்ல பிட்னெஸ் பயிற்சி எடுத்த வருண்!

257
0
Joshua Krishna

Joshua Imai Pol Kaakha; ஜோஷுவா வில்லன் யார் தெரியுமா? பாரிஸ்ல பிட்னெஸ் பயிற்சி எடுத்த வருண்! பப்பி புகழ் வருண் நடிப்பில் உருவாகி வரும் ஜோஷுவா படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் கிருஷ்ணா நடிப்பதாக இயக்குநர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

ஜோஷுவா படத்தில் வருணுக்கு வில்லனாக கிருஷ்ணா நடிப்பதாக இயக்குநர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் வருண். இவர், தயாரிப்பாளர் ஐசனி கணேஷின் மsச்sருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் நடிப்பில் வந்த தலைவா படத்தின் துணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

மேலும், தலைவா படத்தில் விஜய்க்கு நண்பனாகவும் நடித்துள்ளார். இந்தப் படத்தைத் தவிர, ஒரு நாள் இரவில், போகன், வனமகன், நெருப்புடா, சம்டைம்ஸ், எல்.கே.ஜி, பப்பி, கோமாளி, சீறு ஆகிய படங்களில் நடித்துள்ளார். பப்பி படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

தற்போது இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜோஷுவா இமை போல் காக்க என்ற படத்திலும் வருண் ஹீரோவாக நடித்து வருகிறார்.

ஆக்‌ஷன் த்ரில்லர் கதையில் உருவாகும் இந்தப் படத்தில் வருணுக்கு ஜோடியாக புதுமுக நடிகை ராஹீ ஹீரோயினாக அறிமுகமாகிறார். இந்தப் படத்திற்காக வருண் பாரிஸ் சென்று பிட்னெஸ் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

கௌதம் மேனனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒன்றாக எண்டர்டைன்மெண்ட் என்ற நிறுவனத்தின் பேனரில் தயாரிக்கத் தொடங்கினார்.

தற்போது இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் ஐசரி கணேஷ் வெளியிடுகிறார்.

கார்த்திக் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். நேற்று இந்தப் படத்தின் 2ஆவது சிங்கிள் டிராக் நான் உன் ஜோஷுவா பாடல் வீடியோ வெளியானது.

ஆக்‌ஷன், ரொமான்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தப் பாடலின் இறுதியில் கிருஷ்ணா சர்ப்ரைஸாக வந்து சென்றிருப்பார்.

இந்த பாடல் வெளியானதைத் தொடர்ந்து, கிருஷ்ணா தான் இந்தப் படத்தில் வில்லனாக நடிப்பதாக கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணா, வன்மம், யாக்கை, பண்டிகை, மாரி 2, கழுகு, கழுகு 2, வீரா, விழித்திரு, யாமிருக்க பயமேன், கற்றது களவு என்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது வில்லனாக களமிறங்குகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு இந்தப் படம் வெளியாக இருந்தது. ஆனால், இதுவரை வெளியாகவில்லை.

வரும் 2021 ஆம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleHuman விஜய் சேதுபதியின் மனிதன் போட்டோஷூட்: வைரலாகும் வீடியோ!
Next articleவிஷ்ணு விஷால் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜூவாலா கட்டா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here