Home சினிமா கோலிவுட் புரோடக்‌ஷன் டிசைனர், கலை இயக்குநரான கல்யாணி பிரியதர்ஷன் பர்த்டே டுடே!

புரோடக்‌ஷன் டிசைனர், கலை இயக்குநரான கல்யாணி பிரியதர்ஷன் பர்த்டே டுடே!

304
0
Kalyani Priyadarshan Birthday

Kalyani Priyadarshan; நடிகை கல்யாணி பிரியதர்ஷன் (HBD Kalyani Priyadarshan) இன்று தனது 28 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

கல்யாணி பிரியதர்ஷன் (Kalyani Priyadarshan) இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

கடந்த 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் பிறந்தவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.

இயக்குநர் பிரியதர்ஷன் மற்றும் லிஸ்ஸி தம்பதியினரின் மூத்த மகள். இவருக்கு சித்தார்த் என்ற ஒரு சகோதரன் இருக்கிறார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு உதவி புரோடக்‌ஷன் டிசைனராக பணியை தொடங்கியுள்ளார். அதுவும் பாலிவுட்டில் திரைக்கு வந்த கிரிஸ் 3 படம்.

கடந்த 2016 ஆம் ஆண்டு சியான் விக்ரம் நடிப்பில் வந்த இரு முகன் படத்திற்கு கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் விக்ரம் குமார் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் ஒரு நடிகையாக அறிமுகமானார்.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இப்படத்திற்கு சிறந்த நடிகைக்கான சைமா விருது, சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது, சிறந்த அறிமுக ஹீரோயினுக்கான அப்சரா விருது என்று ஒரே வருடத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பெற்றார்.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த ஹீரோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். ஆனால், இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் பேசப்படவில்லை.

எனினும், தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படத்திலும், வான் படத்திலும் கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று தனது 28ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் முதல் நண்பர்கள், ரசிகர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுடன் இணைந்து மிஸ்டர் புயல் இணையதளம் சார்பில் நாமும் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கல்யாணி பிரியதர்ஷன் (Kalyani Priyadarshan) மேடம்…

SOURCER SIVAKUMAR
Previous articleஜெயலலிதா இன்று நேரில் வந்து ஆணையிட்டார்? சட்டென எழுந்த பழனிசாமி
Next articleதிருமண நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனா பர்த்டே டுடே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here