Home சினிமா கோலிவுட் கமல் பட தயாரிப்பாளர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்!

கமல் பட தயாரிப்பாளர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்!

261
0
Anil Suri Died

Anil Suri Died; கமல் பட தயாரிப்பாளர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்! ஆரம்ப காலங்களில் கமல் ஹாசனை வைத்து பாலிவுட்டில் பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் அணில் சூரி கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார்.

பாலிவுட் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் அணில் சூரி கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

கர்மயோகி, ராஜ் திலக், பெகுன்னா உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் அணில் சூரி. இவருக்கு வயது 77. கமல் ஹாசன் நடித்த ராஜ் திலக் படத்தை தயாரித்தவர். இந்த நிலையில், கடந்த 2 ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பிரபல மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், அங்கு போதுமான இடவசதி இல்லை. இதையடுத்து, மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, அவருக்கு கோவிட் 19 கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் உடல் மோசமடைந்ததைத் தொடர்ந்து வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி கடந்த வியாழன்று இரவு 7 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார்.

அணில் சூரியில் இறுதிச் சடங்கு வெள்ளியன்று நடந்தது. இதில், அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். அவர்களும், பாதுகாப்பு உடையை அணிந்து கொண்டுதான் அணில் சூரியில் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அணில் சூரியின் மறைவு சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அணில் சூரிக்கு கமல் ஹாசன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SOURCER SIVAKUMAR
Previous articleசியான்60 ரிலீஸ் தேதி அறிவிப்பு?
Next article10ஆம் வகுப்பு தேர்வுகள் இரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here