Home சினிமா கோலிவுட் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் பிளான்: ரஜினி படத்தில் கமல் ஹாசன்!

லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் பிளான்: ரஜினி படத்தில் கமல் ஹாசன்!

265
0
Thalaivar169

Thalaivar169: Rajinikanth; லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் பிளான்: ரஜினி படத்தில் கமல் ஹாசன்! ரஜினிகாந்த் நடிக்க இருந்த லோகேஷ் கனகராஜ் படத்தில் அவருக்குப் பதிலாக கமல் ஹாசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் நடிக்க இருந்த புதிய படத்தில் அவருக்குப் பதிலாக கமல் ஹாசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.

இது ரஜினி நடிக்கும் 169 ஆவது படம். இந்தப் படத்திற்கு தற்காலிகமாக தலைவர்169 என்று டைட்டில் வைக்கப்பட்டது. அதோடு, மார்ச் மாதத்தில் இந்தப் படத்திற்கு பூஜை போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால், நாட்டையே உலுக்கிய கொரோனா காரணமாக ரஜினியின் அண்ணாத்த, கமலின் இந்தியன் 2 ஆகிய படங்களின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றுள்ளது.

இந்த நிலையில், ரஜினி, கமல், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக இருந்த புதிய படம் தொடங்கப்படுமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த நிலையில், இந்தப் படத்தில், ரஜினிகாந்திற்குப் பதிலாக கமல் ஹாசன் நடிக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி வருகிறது.

ஏனென்றால், அண்ணாத்த படப்பிடிப்பு முடிவதற்குள் தமிழக சட்டமன்ற தேர்தல் காலம் நெருங்கிவிடும்.

அதில், ரஜினி தனது முழு கவனத்தையும் செலுத்த இருப்பதாகவும், அரசியல், சினிமா என்று இரண்டிலும் பயணித்து வரும் கமலே இந்தப் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

ஆனால், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. கைதி படத்தில் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில், தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சஞ்சீவ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். கொரோனா முடிந்து திரையரங்குகள் திறந்த பிறகே மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleமரக்கானத்தில் 4 அடி உயர விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது: விழுப்புரம்
Next articleகொரோனா பரவலை கட்டுபடுத்தும் பொருட்டு ஜூலை 9 முதல் கடுமையான கொரோனா ஊரடங்கு: கொல்கத்தா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here