Kanika; டீ சர்ட்டில் ஹேண்ட்பேக் தயாரிக்கும் நடிகை கனிகா: வைரலாகும் வீடியோ! பழைய டீசர்ட்டில் எப்படி ஹேண்ட்பேக் தயாரிக்கலாம் என்று நடிகை கனிகா தனது வீடியோ மூலமாக கற்றுக்கொடுத்துள்ளார்.
டீ சர்ட்டில் ஹேண்ட்பேக் தயாரிக்கும் நடிகை கனிகாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண ஜனங்கள் வரை அனைவருமே வீட்டியில் முடங்கியிருக்கின்றனர்.
ஆனால், எப்போதும் பிஸியாக காட்டிக்கொள்ளும் சினிமா பிரபலங்களுக்கு வீட்டில் இருப்பது கொஞ்சம் கஷ்டமான ஒன்றுதான். இந்த நிலையில், தான் அவர்கள் தங்களை பிஸியாகவே வைத்துக் கொள்கின்றனர்.
எப்படியென்றால், இதுவரை வீட்டு வேலை செய்யாதவர்கள், வீட்டு வேலையிலும், ஓவியம் வரைதல், உடற்பயிற்சி செய்தல், சமையல் செய்தல், துணி துவைத்தல் போன்றவற்றில் தங்களை பிஸியாக வைத்துக் கொள்கின்றனர்.
அந்த வகையில், நடிகை கனிகா தனது ஓய்வு நேரத்தை பயனுள்ள வழியில் செலவிட்டு வருகிறார்.
ஆம், பயன்படுத்தபடாத பழைய டீ சர்ட்டுகளை வைத்து ஹேண்ட் பேக் தயாரிக்கும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மேலும், இதுவரை 10 ஹேண்ட் பேக்குகள் தயாரித்துள்ளதாகவும், பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
அதோடு, நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு தான் பயன்படுத்திய ஹேண்ட்பேக்குகளை கொடுக்க இருப்பதாகவும், இனி வரும் காலங்களில் அளவுக்கு அதிகமான ஹேண்ட்பேக்குகளை தயாரிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.