Kavin Vadivelu T Shirt; ஆஹான் தான் எமோஷன்: தலைவன் தான் சொலியூஷன்: கவின் டி சர்ட்! பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் கவின் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைகைப்புயல் வடிவேலுவின் முகம் பதித்த டி சர்ட் ஒன்றை அணிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
வடிவேலுவின் முகம் கொண்ட டி சர்ட்டை அணிந்து புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவின் பதிவிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் வேட்டையனாக வலம் வந்தவர் நடிகர் கவின்.
இவர், பீட்சா, இன்று நேற்று நாளை, சத்ரியன், நட்புனா என்னானு தெரியுமா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
என்னதான் படங்களில் நடித்திருந்தாலும் கவின் என்னவோ உலகம் முழுவதும் பிரபலமானது கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகத்தான்.
அதற்கு முன்னதாகவே விஜய் தொலைக்காட்சியில் கனா காணும் காலங்கள், தாயுமானவன் ஆகிய தொடர்களிலும் நடித்துள்ளார்.
பிக் பாஸ் மூலம் லோஸ்லியாவையும் காதலித்தார். ஆனால், இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அப்படி ஒன்றும் நடக்காதது போன்று இருவரும் அவரவர் படங்களில் பிஸியாகிவிட்டனர்.
கவின், லிப்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடித்து வருகிறார். விரைவில், இந்தப் படம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
நாட்டையே உலுக்கிய கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் கவின், தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது வைகைப்புயல் வடிவேலுவின் முகம் கொண்ட டி சர்ட் ஒன்றை அணிந்து கொண்டு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதோடு, ஆஹான் இஸ் எமோஷன், தலைவன் இஸ் சொலியூஷன் என்று பதிவிட்டுள்ளார்.
வடிவேலு குறித்து கவின் இவ்வாறு பதிவிட்டது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதோடு, வடிவேலுவின் முகம் கொண்ட டி சர்ட்டைப் பார்த்த பலரும் டி சர்ட் வேற லெவெல் என்று புகழ்ந்துள்ளனர்.
இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.