சேலம்: வார இறுதி நாட்களாகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி விற்க அனுமதிக்கப்படும் என சேலம் மாநகராட்சி ஆணையர் ஆர். சதீஷ் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் ஏப்ரல் 11 முதல் இறைச்சி கடைகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க அனுமதி வழங்கப்படாமல் இருந்தன.
“இறைச்சி கடைகாரர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி விற்கவிற்க அனுமதி கேட்டதை அடுத்து தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது,” என சதீஷ் தெரிவித்தார்.
சமூக விலகல் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்
மேலும் இறைச்சி கடைகளில் சமூக விலகல் தீவிரமாக கடைபிடிக்கப்படவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். ” முக கவசம் அணியாதவர்களுக்கு இறைச்சி விற்கப்படக்கூடாது” என
அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் சமூக விலகல் விதிகளை கடைபிடிக்காமல் மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
சட்ட நடவடிக்கை பாயும்
அவ்வாறு விதிமீறல் செய்யும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் மற்றும் தகுந்த சட்ட நடவடிக்கை பாயும் எனவும் அவர் எச்சரித்தார்.