Home சினிமா கோலிவுட் மகனுக்காக துடிக்கும் தாய்ப்பாசம்: கீர்த்தி சுரேஷின் பென்குயின் டிரைலர் வெளியீடு!

மகனுக்காக துடிக்கும் தாய்ப்பாசம்: கீர்த்தி சுரேஷின் பென்குயின் டிரைலர் வெளியீடு!

0
333
Penguin Trailer Released

Penguin Trailer; மகனுக்காக துடிக்கும் தாய்ப்பாசம்: கீர்த்தி சுரேஷின் பென்குயின் டிரைலர் வெளியீடு! கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள பென்குயின் படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பென்குயின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தொடர்ந்து, ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷிற்கு மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படம் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றுக் கொடுத்தது.

தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதில் ஒன்று தான் பென்குயின். அறிமுக இயக்குநர், ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Stone Bench Films நிறுவனம் மற்றும் Passion Studios நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். தாய்ப்பாசத்தை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக குழந்தைக்கு அம்மாவாக கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தில் நடித்துள்ளார். அதாவது அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தைப் போன்று பென்குயின் படமும் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

வரும் ஜூன் 19 ஆம் தேதி பென்குயின் அமேசான் பிரைமில் வெளியாகிறது. இந்த நிலையில், தற்போது பென்குயின் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

பென்குயின் டிரைலரில், கீர்த்தி சுரேஷ் தனது மகன் அஜய்க்கு சோறு ஊட்டி விடுகிறார். அதன் பிறகு அஜய் காணாமல் போவதும், அவரை போலீசாருடன் இணைந்து தேடுவதும், விறுவிறுப்பாக டிரைலர் நகர்கிறது.

அதன் பிறகு, காட்டுப்பகுதிக்குள் சிறுவனின் சடலம் மீட்கப்படுவது போன்று காட்டப்பட்டுகிறது. அது அஜய் என்று போலீசார் கூறுகின்றனர்.

ஆனால், அஜய்க்கு ஒன்றும் ஆகவில்லை என்று கீர்த்தி சுரேஷ் கூறுவது போன்று டிரைலரில் காட்டப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தனது மகனுக்காக, அடையாளம் தெரியாத மர்ம நபரை தேடும் வேட்டையில் கீர்த்தி சுரேஷ் இறங்குகிறார்.

அதன் பிறகு அவர் சந்திக்கும் பிரச்சனைகள் தான் படம். இறுதியில், தனது மகனை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது பென்குயின் படத்தின் கதை.

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் பென்குயின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழில் நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். மலையாளத்தில் நடிகர் மோகன் லாலும், தெலுங்கில் நானியும் பென்குயின் டிரைலரை வெளியிட்டுள்ளனர்.

இதே போன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான பென்குயின் டீசரை, த்ரிஷா, சமந்தா, மஞ்சு வாரியர், டாப்ஸி ஆகியோர் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here