Keerthy Suresh Penguin Tamil Teaser; காணாமல் போன மகனை தேடும் கீர்த்தி சுரேஷ்: பென்குயின் டீசர் வெளியீடு! கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள பென்குயின் படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
பென்குயின் டீசர் வெளியாகியுள்ளது. பென்குயின் டீசரை நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ளார்.
குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
தொடர்ந்து, ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷிற்கு மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படம் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றுக் கொடுத்தது.
தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதில் ஒன்று தான் பென்குயின். அறிமுக இயக்குநர், ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
Stone Bench Films நிறுவனம் மற்றும் Passion Studios நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். தாய்ப்பாசத்தை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக குழந்தைக்கு அம்மாவாக கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தில் நடித்துள்ளார். அதாவது அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தைப் போன்று பென்குயின் படமும் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. வரும் ஜூன் 19 ஆம் தேதி பென்குயின் அமேசான் பிரைமில் வெளியாகிறது. இந்த நிலையில், தற்போது பென்குயின் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
பென்குயின் டீசரில், முதலில் சூரியன் உதயமாகிறது. அதன் பிறகு நீர்வீழ்ச்சி காட்டப்படுகிறது. தொடர்ந்து, தனது மகனுடன் கீர்த்தி சுரேஷ் கொஞ்சி விளையாடுகிறார்.
குடையை பிடித்துக் கொண்டு மலைப்பகுதியில் தனது மகனுடன் நடந்து செல்லும் கீர்த்தி சுரேஷ் சிறிது நேரத்தில் அஜய் அஜய் என்று அழுது கொண்டே குரல் எழுப்புகிறார்.
இதன் மூலம், கீர்த்தி சுரேஷின் மகன் பெயர் தான் அஜய் என்று தெளிவாகிறது. அஜய் காணாமல் போகிறான். அவனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் குழந்தை சடலமாக மீட்கப்படுவது போன்று காட்டப்படுகிறது. இறுதியாக யாரோ ஒருவன் ஆயுதத்தை யாரையோ கொலை செய்து போன்று தெரிகிறது. அப்படியே டீசரும் முடிகிறது.
இதன் மூலம் பென்குயின் டீசர் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது போன்று தெரிகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பென்குயின் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
பென்குயின் தமிழ் டீசரை நடிகை த்ரிஷாவும், மலையாள டீசரை மஞ்சு வாரியரும், தெலுங்கு டீசரை சமந்தாவும் மற்றும் டாப்ஸியும் வெளியிட்டுள்ளனர்.