KGF Yash: யாஸ் தாடியை எடுக்க காரணம் என்ன? அப்போ கேஜிஎப் பார்ட் என்ன ஆச்சு? 2 பாகத்துடன் முடிஞ்சு போச்சா? பாகுபலி போல எங்கும் ரசிகர்கள்
கேஜிஎஃப் (KGF) மற்றும் கேஜிஎஃப் 2 (KGF 2) ஆகிய படங்களுக்காக கிட்டத்தட்ட 3 வருடங்களாக தாடி வளர்த்து வந்த நடிகர் யாஷ் (Yash Trim His Beard) தற்போது தனது தாடியை எடுத்துள்ளார்.
கேஜிஎஃப் (KGF) படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகர் யாஷ் (Yash). இயக்குநர் பிரசாந்த் நீல் தயாரிப்பில் கன்னடத்தில் வெற்றிநடை போட்ட படம் கேஜிஎஃப்.
பிறக்கும் போது ஏழையாக பிறந்து, சாகும் போது பணக்காரனாகத்தான் சாகணும் என்று அம்மா சத்தியம் வாங்குகிறார்.
தன் அம்மாவின் சத்தியத்திற்காக பணக்காரனாக துடிக்கும் சிறுவன் ராக்கி கேங்க்ஸ்டராக மாறுகிறார். தங்கச்சுரங்கத்தை ஆட்டிப்படைக்கும் வில்லனை கொல்வதற்காக துணிச்சலோடு அவரது இடத்திற்கே செல்கிறார்.
அங்கிருக்கும் ஏழை கொத்தடிமை மக்களைக் கண்டு உணர்ச்சிவசப்படுகிறார். இறுதியில், வில்லனை கொன்று குவிக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்கும் படி இயக்கியிருந்தார் இயக்குநர்.
அந்தளவிற்கு படத்தின் காட்சிகள் கட்சிதமாக இருந்தது. ரொமான்ஸ், ஆக்ஷன், சென்டிமெண்ட் என்று எந்த இடத்திலும் குறையில்லாத படமாக கேஜிஎஃப் உருவாக்கப்பட்டிருந்தது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கேஜிஎஃப் 2 ஆம் பாகமும் உருவாகியுள்ளது.
அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் 2 படத்திற்காக கிட்டத்தட்ட 3 வருடங்களாக தனது தாடியை வளர்த்து வந்துள்ளார் யாஷ்.
கேஜிஎஃப் 2 படத்தோடு ராக்கி கதாபாத்திரம் முடியும் என்று தெரிகிறது. ஏனென்றால், 3 வருடங்களாக ராக்கி கதாபாத்திரத்திற்காக வளர்த்து வந்த தனது தாடியை யாஷ் ட்ரிம் செய்துள்ளார்.
தாடியை ட்ரிம் செய்து புதிய தோற்றத்தில் இருக்கும் யாஷின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேஜிஎஃப் 2 படத்தில் யாஷிற்கு வில்லனாக சஞ்சய் தத் நடித்துள்ளார். மேலும், யாஷிற்கு ஜோடியாக ரவீனா டாண்டன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேஜிஎஃப் 2 படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. படம் இப்போது வெளியானாலும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
பாகுபலி இரண்டாம் பாகம் வெளிவரும்போது இருந்த எதிர்பார்ப்பைவிட இதன் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து உள்ளது.
அந்த படம் வெளிவந்தவுடன் மூன்றாம் பாகம் எடுக்கவேண்டும் என ரசிகர்கள், ராஜமவுலியை வலியுறுத்தினர். ஆனால் ராஜமவுலி மறுத்துவிட்டார்.
அதேபோல் கேஜிஎப் 3 பாகம் வேண்டும் என ரசிகர்கள் நினைத்தாலும் இனி அதற்கு வாய்ப்பில்லை என யாஷ் தனது தாடியை எடுத்துவிட்டார்.