Khushbu Sundar; டுவிட்டரில் குஷ்பு, அஜித் ரசிகர்கள் மோதல்! கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு குஷ்பு மற்றும் அவரது கணவர் இணைந்து ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.
டுவிட்டரில் குஷ்பு மற்றும் அஜித் ரசிகர்கள் மோதிக்கொண்டனர்.
குஷ்பு, விஜய்க்கு ஆதரவாகவும், அஜித் ரசிகர்களுக்கு எதிராகவும் டுவிட்டரில் வாக்குவாதம் செய்துள்ளார்.
உலகமே கொரோனா பீதியில் இருக்கிறது. இந்தியாவிற்கு மட்டும் விதிவிலக்கு கிடைக்குமா என்ன? சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு 100 நாடுகளையும் கடந்து இந்தியாவிலும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் மட்டும் 1238 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 124 பேர் குணமடைந்த நிலையில், 35 பேர் பலியாகியுள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதோடு பலி எண்ணிக்கையும் கூடிக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில், தான் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக, சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, விஜய் சேதுபதி, சூர்யா குடும்பத்தினர், ரஜினிகாந்த், பிரகாஷ் ராஜ், ஹரிஷ் கல்யாண், விஜய் மக்கள் இயக்கம் ஆகியோர் பலர் அரிசி மூட்டை, நிதியுதவி வழங்கினர்.
இந்த நிலையில், இவர்களது வரிசையில், குஷ்பு மற்றும் அவரது கணவர் சுந்தர் சியும் இணைந்துள்ளனர். ஆம், சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், குஷ்பு மற்றும் சுந்தர் சி இருவரும் இணைந்து ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.
மேலும், நண்பர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் உதவ முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.
இதற்கு விமர்சனம் செய்த அஜித் ரசிகர் ஒருவர் கூறுகையில், தமிழக மக்களுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். விஜய் கூட ஒரு தமிழன் தான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த குஷ்பு கூறுகையில், நீங்கள் தமிழக மக்களுக்கு ஏதாவது செய்யுங்களேன், ஏன் கூத்தாடி கூத்தாடிகளுக்கு நிதியுதவி அளியுங்கள் என்று கோபமாக பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம், குஷ்பு, விஜய்க்கு ஆதரவாக பேசியதாகவும், அஜித்துக்கு எதிராக அவரது ரசிகர்களை விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது.
பொதுவாக, அஜித் ரசிகர்கள் விஜய் பற்றியும், விஜய் ரசிகர்கள் அஜித் பற்றியும் மாறி மாறி விமர்சித்துக் கொள்வது வழக்கம். ஆனால், பொதுமக்களை வைத்து ஒட்டுமொத்த சினிமா உலகையும் விமர்சிப்பது என்பது கொஞ்சம் கடினமானதுதான்.
ரசிகர்களின் இது போன்ற செயலுக்கு அஜித் எவ்வாறு பொறுப்பேற்க முடியும் என்று சிலர் குஷ்புவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.