Home சினிமா கோலிவுட் Valimai Ajith Mankatha: வலிமை அஜித்தின் அடுத்த மங்காத்தா: ஹெச் வினோத்!

Valimai Ajith Mankatha: வலிமை அஜித்தின் அடுத்த மங்காத்தா: ஹெச் வினோத்!

422
0
Valimai Ajith Mankatha

Valimai Ajith Mankatha வலிமை அஜித்தின் அடுத்த மங்காத்தா என்று இயக்குநர் ஹெச் வினோத் அவரது டுட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வலிமை அஜித்தின் அடுத்த மங்காத்தா இயக்குநர் ஹெச் வினோத் பதிவு.

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித் மீண்டும் இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

வலிமை

போலீஸ் கதையை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடி யார் என்பது குறித்து இதுவரை படக்குழுவினர் அறிவிப்பு வெளியிடவில்லை.

ஆனால், பாலிவுட் நடிகை ஹூமா குரேசி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பெண்களை மையப்படுத்தி உருவான நேர்கொண்ட பார்வைக்கு கிடைத்த வரவேற்பை விட வலிமை படத்திற்கு அதிகளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையைச் சுற்றிலும் அஜித்தின் பைக் ரேஸ் காட்சி எடுக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்பெயினில் சண்டைக் காட்சிகள் எடுக்க படக்குழு ஸ்பெயின் செல்ல இருந்தது.

ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக ஸ்பெயின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மங்காத்தா

மங்காத்தா படம் கேடிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து #MankathaOnKTV டுவிட்டரில் தாறுமாறாக டிரெண்டானது.

தல ரசிகர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர். எத்தனையோ முறை யூடியூப்பிலும், டவுன்லோடு செய்தும் படத்தை பார்த்த போதிலும், கேடிவியில் தற்போது உலகமே வீட்டில் இருக்கும் போது ஒளிபரப்பு செய்யப்பட்டது இரட்டிப்பு மகிழ்ச்சியே.

Valimai Ajith Mangatha

இந்த நிலையில், வலிமை பட கதை குறித்து முக்கியமான தகவல் ஒன்றை ஹெச் வினோத் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இப்போது கேடிவியில் எனது ஆல்டைம் பேவரைட் படமான மங்காத்தா பார்க்கிறேன்.

தல ரசிகர்களே நீங்கள் அடுத்த மங்காத்தாவான வலிமை படத்தை பார்ப்பதற்கு தயாராகுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

மங்காத்தா அஜித் பிரியாணி

இவரைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு, மங்காத்தா படப்பிடிப்பு நேரத்தில் தான் டுவிட்டரில் பதிவிட்டதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து மறுபடியும், பதிவிட்டுள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது: இன்று இன்டர்வெல் காட்சியை படப்பிடிப்பு செய்தோம். திரையரங்கில் இன்டர்வெல் காட்சி வரும் போது தல அஜித் எங்களுக்கு பிரியாணி சமைத்த காட்சி இது என்பதை நினைவில் கொள்க என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜூன், த்ரிஷா, ராய் லட்சுமி, பிரேம்ஜி அமரன், வைபவ், ஆண்ட்ரியா, அஞ்சலி, மகத் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் மங்காத்தா.

Ajith 50th Movie Mangaatha

விநாயக் மகாதேவ் என்ற கதாபாத்திரத்தில் மும்பையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அசிஸ்டன்ட் கமிஷனர். அஜித்தின் 50ஆவது படமான மங்காத்தா பிளாக்பஸ்டர் படமாகவும் அமைந்தது. வசூல் ரீதியாக நல்ல வரவேற்பும் பெற்றது.

SOURCER SIVAKUMAR
Previous articleஸ்டார் வார்ஸ் ஆண்ட்ரிவ் ஜாக் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்
Next articleவிஜய்க்கு ஆதரவாக பேசிய குஷ்பு: டுவிட்டரில் அஜித் ரசிகர்களுடன் மோதல்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here