Kiran Rathod; அரைகுறை ஆடையுடன் கிளாமராக போஸ் கொடுக்கும் கிரண் அலப்பறைகள்! சியான் விக்ரம் நடிப்பில் வந்த ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை கிரண் தொடர்ந்து அரைகுறை ஆடையுடன் கூடிய கிளாமரான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
நடிகை கிரண் தனது கிளாமரான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
சியான் விக்ரம் நடிப்பில் திரைக்கு வந்த ஜெமினி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கிரண். அதன் பிறகு வில்லன், அன்பே சிவம், திவான், பரசுராம், அரசு, வின்னர், தென்னவன்,
திருமலை (சிறப்பு தோற்றம் – பாடல்), நியூ, சின்னா (சிறப்பு தோற்றம் – பாடல்), திமிரு, வசூல், ராஜாதி ராஜா, ஜக்குபாய், குரு சிஷ்யன், சகுனி, ஆம்பள, முத்தின கத்திரிக்கா, இளமை ஊஞ்சல் என்று வரிசையாக ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தமிழைத் தவிர, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சர்வர் சுந்தரம் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இதுவரை வெளியாகவில்லை.
தற்போது 39 வயதாகும் கிரண் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். நாட்டையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 4ஆவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த லாக்டவுன் வரும் 31 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வீட்டிலேயே இருக்கும் கிரண், தொடர்ந்து தனது கிளாமரான புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமிலும், டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இதன் காரணமாக ஹலோவில் கிரண் அலப்பறைகள் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிற்து. அது மட்டுமல்லாமல், டிக் டாக் செய்தும் வீடியோ வெளியிட்டு வருகிறார்.
உலகமே டிக் டாக் வீடியோவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை உருவாகி வரும் சூழலில் நடிகை கிரண் அதற்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், டிக் டாக்கை வெறுப்பவர்கள் மன்னிக்கவும், என் வேடிக்கைக்கு வேறு எதுவும் இல்லை. டிக் டாக் உடன் வாழ்வோம் என்று கூறியுள்ளார்.