12 வருடங்களுக்கு முன்பு மிகவும் பிரபலமான காமெடி ஷோ தான் லொள்ளு சபா
அன்று விஜய் டிவியை மக்கள் பார்ப்பதற்கு மர்மதேசம், மாயா மச்சீந்திரா, லொள்ளு சபா போன்ற தொடர் மற்றும் நிகழ்ச்சிகளை காரணம்.
அதிலும் ஒரு படத்தை எடுத்து அதிலுள்ள சீன்களையும் கலாய்த்து மக்களிடம் மிகவும் பிரபலம் பெற்றது.
ஈஸ்டர், லொள்ளு சபா மனோகர், சந்தான,ம் ஜீவா போன்றவர்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்கள்.
பின்பு சந்தானம் மிகப் பெரிய நடிகராக உருவெடுத்தார். அதற்கு அடுத்து வந்த ஜீவாவும் சில படங்களில் காமெடியனாக நடித்தார்.
லொள்ளு சபா மனோகர் இன்றும் மக்களிடையே மிகவும் பிரபலமானவர். சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
லொள்ளு சபா வீடியோக்கள் யூட்யூபில் அதிகம் பார்வையாளர்களைக் கடந்தது. இன்றுவரை மன உளைச்சலில் இருப்பவர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து சிரித்துக் கொள்வார்கள்.
இதனாலேயே லொள்ளு சபாவின் யூடியூப் வீடியோக்கள் அதிக பார்வையாளர்களை கடந்து உள்ளது.
இருந்தும் அதில் ஹை குவாலிட்டி வீடியோக்கள் கிடைப்பதில்லை. இது விஜய் டிவில் மட்டுமே உள்ளது.
90களில் பிறந்தவர்கள் லொள்ளு சபாவை மீண்டும் ஒளிபரப்ப மாட்டார்களா? என்ற ஏக்கமும் இன்றளவும் இருந்துவருகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக தற்போது 21 நாள் ஊரடங்கு உத்தரவு இந்திய மக்கள் இருந்து வருகிறார்கள்.
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் மக்கள் விருப்பத்திற்கு ஏற்றது போல் மகாபாரதம் ,சக்திமான் போன்ற தொடர்களை மீண்டும் ஒளிபரப்ப தொடங்கிவிட்டார்கள்.
தற்போது ரசிகர் ஒருவர் மகாபாரதம், சக்திமான் போன்ற தொடர்களை ஒளிபரப்பவது போல விஜய் டிவில் நீங்களும் லொள்ளு சபா நிகழ்ச்சியை ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டு கோரிக்கை வைத்தார்.
இதை கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து அதற்கு உடன்படுகிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.
மக்கள் இதை வைரலாக ஷேர் செய்து வருகிறார்கள் விஜய் டிவி இந்த கோரிக்கையை ஏற்று மீண்டும் உள்ள சுப நிகழ்ச்சியை ஒளிபரப்புமா?
90களில் பிறந்தவர்களின் இயக்கங்களை பூர்த்தி செய்யுமா