Home சினிமா கோலிவுட் Maanaadu: தீம் பார்க்கில் மாநாடு படப்பிடிப்பு!

Maanaadu: தீம் பார்க்கில் மாநாடு படப்பிடிப்பு!

278
0
Maanaadu Song Shoot

Maanaadu: மாநாடு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாநாடு படத்தின் பாடல் காட்சிக்காக படக்குழுவினர் சென்னை தீம் பார்க்கில் பிரமாண்ட அளவில் செட் அமைத்து படமாக்கி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் நடிகர் சிம்புவும் ஒருவர். இவருக்கு என்று தனி ரசிகர்களே உண்டு. கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள சிம்பு, காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

இப்படத்தைத் தொடர்ந்து தம், அலை, கோவில், குத்து, மன்மதன், தொட்டி ஜெயா, சரவணா, வல்லவன், காளை, சிலம்பாட்டம், விண்ணைத்தாண்டி வருவாயா, வானம், ஒஸ்தி, போடா போடி, வாலு, இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், செக்க சிவந்த வானம், காற்றின் மொழி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் வந்தா ராஜாவாதான் வருவேன். இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு. படத்தின் டைடிலுக்கு ஏற்பவே திரும்ப வந்தார்.

தற்போது மஹா என்ற படத்திலும், மாநாடு என்ற படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். அண்மையில், மாநாடு படத்திற்கு பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நடக்குமா, நடக்காதா என்று அனைவருமே ஆவலாக காத்திருந்த படம்தான் மாநாடு. இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.  இப்படத்தின் போஸ்டர் கடந்தாண்டே வெளியிடப்பட்டது.

ஆனால், அதன் பிறகு சிம்பு மற்றொரு படப்பிடிப்பில் பிஸியானதால், மாநாடு படப்பிடிப்பு தடைபட்டது. இதையடுத்து, இந்தப் படத்தில், சிம்புவிற்குப் பதிலாக மற்றொரு நடிகர் நடிப்பார் என்று தகவல் வந்தது.

ஆனால், மாநாடு படப்பிடிப்பு நடக்கவே நடக்காது என்று கூறியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் இன்று மாநாடு படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இதில், வெங்கட் பிரபு, சிம்பு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, கல்யாணி ப்ரியதர்ஷன், இயக்குநர் பாரதிராஜா, பிரேம்ஜி அமரன், நடிகர் மனோஜ் ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்.

இதனால், சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதோடு, வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் போது அதிகளவில் தனது உடல் எடையை கூட்டியிருந்த சிம்பு, இந்தப் படத்திற்காக தனது எடையை வெகுவாக குறைத்து சும்மா கெத்தா வந்திருக்கிறார்.

இப்படத்தில் அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது சென்னையில், தீம் பார்க்கில் மாநாடு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

அதுவும் பாடல் காட்சி என்று கூறப்படுகிறது. பாடல் காட்சிக்காக தீம் பார்க்கில் பிரமாண்ட அளவில் செட் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தப் புகைப்பட்த்தில் சிம்பு சிரித்தபடி, பாடல் காட்சிக்கான காஸ்டியூமில் இருந்தவாறு கையில் டீ கப் வைத்திருக்கிறார். இவருக்கு அருகில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleAlexander Graham Bell Birthday; வரலாற்றில் இன்று மார்ச் 02
Next articleதேர்வரைகளில் AL கருவிகள்; இனி பார்த்து எழுத இயலாதா? கலங்கும் மாணவர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here