Malavika Mohanan; அச்சச்சோ…இவங்க விஜய் சேதுபதிக்கு தங்கச்சியா? விஜய் சேதுபதிக்கு சகோதரியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார் என்று தகவல் பரவி வருகிறது.
கைதி படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள புதிய படம் மாஸ்டர் (Master). இப்படத்தில், விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ், ஸ்ரீமன், சாந்தணு, சஞ்சீவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி இப்படம் அறிவித்தபடி வெளியாக இருக்கிறது. இதற்கு முன்னதாக வரும் 22 ஆம் தேதி மாஸ்டர் டிரைலர் வெளியாக இருக்கிறது.
அண்மையில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. இதில், படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது பேசிய விஜய், தனது வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை கூட ஜாலியாகத்தான் இருந்தது என்று குறிப்பிட்டார்.
அப்போது பேசிய விஜய் சேதுபதி (Vijay Sethupathi) இது இரண்டு ஹீரோ சம்பந்தப்பட்ட கதை என்றும், ஹீரோ வில்லன் என்ற கதை இல்லை என்றும் கூறியிருந்தார்.
மாஸ்டர் படத்தில் விஜய், மாணவர்களின் டீனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் விஜய் ஜான் துரைராஜ் என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
மாஸ்டர் விஜய்யின் கல்லூரி ஐடி கார்டு (Vijay College ID Card) ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி வருகிறது.
அதன்படி, விஜய் சேதுபதியின் சகோதரியாகத்தான் மாளவிகா மோகனன் (Malavika Mohanan) நடித்துள்ளார் என்று தகவல் பரவி வருகிறது.
ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. படம் வெளியான பிறகுதான் இது குறித்து தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.