Home சினிமா ஹாலிவுட் சினிமா கொரோனாவால் 6,7 மாதம் தள்ளிப்போன ஹாலிவுட் படங்களின் பட்டியல்!

கொரோனாவால் 6,7 மாதம் தள்ளிப்போன ஹாலிவுட் படங்களின் பட்டியல்!

366
0
Hollywood Movies

Hollywood Movies Release Postponed:

கொரோனாவால் 6,7 மாதம் தள்ளிப்போன ஹாலிவுட் படங்களின் பட்டியல்! F9 and Black Widow ஆகிய படங்கள் உள்பட ஏராளமான ஹாலிவுட் படங்களின் ரீலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏழு ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

சீனாவில் தொடங்கி ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, தைவான் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக படங்களின் ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், அமெரிக்காவில் ஏராளமான ஹாலிவுட் படங்களின் ரிலீஸ் தேதி 6,7 மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அதில், ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும் நோ டைம் டூ டை படம் நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் இதுவரை மொத்தம் 24 படங்கள் வெளியாகியுள்ள நிலையில், 25 ஆவது படமாக நோ டைம் டூ டை படம் உருவாகியுள்ளது.

இதில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் டேனியல் கிரேக் நடித்துள்ளார். மேலும், ராய்ல்ப் பியென்னஸ், நவோமி ஹாரிஸ், ராமி மலேக், ஜெப்ரி ரைட் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஏற்கனவே வரும் ஏப்ரல்  3 ஆம் தேதி இங்கிலாந்திலும், 8 ஆம் தேதி அமெரிக்காவிலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா காரணமாக இங்கிலாந்தில் வரும் நவம்பர் 12 ஆம் தேதியும், அமெரிக்காவில் நவம்பர் 25 ஆம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Hollywood Movies Release Postponed இதே போன்று,

A Quiet Place Part II த்ரில்லர் கதையை மையப்படுத்திய இப்படம் வெள்ளியன்று வெளியாக இருந்தது.

தற்போது ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Mulan லைவ் ஆக்‌ஷன் கதையை மையப்படுத்திய இப்படம் வரும் 27 ஆம் தேதியிலிருந்து தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

The New Mutants இப்படம் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Peter Rabbit 2: The Runaway ஏப்ரல் 3 ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

The Lovebirds ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியாகும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. நியூ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

Trolls World Tour  ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Antlers ஏப்ரல் 17 ஆம் தேதி ரிலீஸிலிருந்து பின் வாங்கியுள்ளது.

Antebellum ஏப்ரல் 24 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Black Widow மே 1 ஆம் தேதியிலிருந்து தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Run இப்படம் வரும் மே 8 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், பின் வாங்கியுள்ளது.

The Personal History of David Copperfield மே 8 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Spiral மே 15 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Woman in the Window மே 15 ஆம் தேதியிலிருந்து தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

F9 படம் வரும் மே 22 ஆம் தேதியிலிருந்து அடுத்தாண்டு ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அலறும் ஹாலிவுட் ஸ்டுடியோக்கள்: கரோனாவால் நிறுத்தப்படும் படப்பிடிப்புகள்

Previous articleஅச்சச்சோ…இவங்க விஜய் சேதுபதிக்கு தங்கச்சியா?
Next articleஅருவா பிரச்சனையே முடியல: அதுக்குள்ள அடுத்த அப்டேட்டா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here