சூரரைப் போற்று படத்தின் முதல் சிங்கிள் டிராக் மண்ணுருண்ட பாடல் லிரிக் (Mannurunda Lyric Video) வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
Mannurunda Song; மண்ணுருண்ட பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் பலரும் குத்தாட்டம் போட்டு வருகின்றனர்.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று (Soorarai Pottru). ஏர் டெக்கான் நிறுவனத்தின் துணை நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
வரும் மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டும், தொழிலாளர் தினத்தை முன்னிட்டும் சூரரைப் போற்று படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில், சூரரைப் போற்று படத்தின் முதன் சிங்கிள் டிராக் மண்ணுருண்ட பாடல் லிரிக் (Soorarai Pottru Song Mannurunda Lyric) வீடியோ வெளியாகியுள்ளது.
கிராமத்தில் நிகழ்ந்த ஒரு இறப்பு நிகழ்ச்சியை மையப்படுத்தி இந்தப் பாடல் அமைக்கப்பட்டுள்ளது.
பாடலில் சூர்யா இறந்த ஒரு வயதான ஒரு பெரியவரை தனது கையால் தூக்கிச் செல்கிறார்.
அவருக்கு இறுதிச் சடங்கு செய்யப்படுகிறது. இதையடுத்து, பாடும் பாடலாக மண்ணுருண்ட பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாடலை சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் அவருக்கே உரிய பாணியில் பாடி ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்துள்ளார்.
சாவு வீட்டில், குத்தாட்டம் போடுவது வழக்கம். அதனை மையப்படுத்தி இந்தப் பாடல் வித்தியாசமான முறையில் உருவாகியுள்ளது.
மண்ணுருண்ட பாடலுக்கு ஏகாதேசி பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார்.
இதோ அந்தப் பாடல் வரிகள்;
மண்ணுருண்ட மேல இங்க
மனுசபய ஆட்டம் பாரு
கண்ணு ரெண்ட மூடிப்புட்டா
வீதியிலே போகும் தேரு
அண்டாவுல கொண்டு வந்து
சாராயத்த ஊத்து
அய்யாவோட ஊர்வலத்துல
ஆடுங்கடா கூத்து
ஏழை பணக்காரன் இங்கு எல்லாம் ஒன்னு பங்கு
கடைசில மனுசனுக்கு ஊதுவாய்ங்க சங்கு
நெத்திக் காசு ஒத்த ரூபா கூட வரும் சொத்து தானே
செத்தவரும் சேர்ந்து ஆட வாங்கி போட்டு குத்துவோமே
சாராயம் குடிச்சவங்க வேட்டி அவிழ்ந்து விழுமே
கொடம் உடைக்கும் இடம் வரைக்கும் பொம்பளைங்க அழுமே
ஆயிரம் பேரு இருந்தாலும் கூட யாரும் வல்லடா
அடுக்குமாடி வீடு இருந்தும் ஆறடி தான் மெய்யடா
கீழ் சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா?
அய்யா ஓடுறது சாக்கடையா
அந்த மேல் சாதிக்காரனுக்கு
அந்த மேல் சாதிக்காரனுக்கு ரெண்டு கொம்பு இருந்தா
உழைக்கிற கூட்டம் எல்லாம் கீழ் சாதி மனுசங்களாம்
உக்காந்து திங்கிறவெல்லாம் மேல் சாதி வம்சங்களாம்
என்னங்கடா நாடு அட சாதிய தூக்கிப்போடு
என்னங்கடா நாடு அட சாதிய புதைச்சு மூடு
என்று அந்த பாடல் வரிகள் முடிகிறது.
மண்ணுருண்ட பாடல் லிரிக் வீடியோ தெலுங்கிலும் சித்ரமைனா பூமி என்ற டைட்டிலில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் சூரரைப் போற்று படத்தை தயாரித்துள்ளார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுடன் இணைந்து ஊர்வசி, கருணாஸ், ஜாக்கி ஷெராஃப், மோகன் பாபு, சம்பத் ராஜ், விவேக் பிரசன்னா, காளி வெங்கட் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
மண்ணுருண்ட பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து சுதா கொங்கரா, சூரரைப் போற்று, செந்தில் கணேஷ் ஆகியோரது டுவிட்டர் ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
இந்த பாடல் வெளியானதிலிருந்து செந்தில் கணேஷிற்கு சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.