Home சினிமா கோலிவுட் மரைக்காயர் டிரைலர் வெளியீடு!

மரைக்காயர் டிரைலர் வெளியீடு!

332
0
Mohan Lal Maraikkayar Trailer

Marakkar Trailer மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

மோகன் லால், கீர்த்தி சுரேஷ், ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், பிரபு ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம் படத்தின் டிரைலர் Mohanlal Marakkar Trailer வெளியாகியுள்ளது.

குஞ்ஞாலி மரைக்காயர் என்பது கோழிக்கோடு சாமுத்திரி மன்னனுக்கு கடற்படை தலைவர்களாக திகழ்ந்தவருக்கு வழங்கப்பட்ட புனைப்பெயர்.

முதலாம் குஞ்ஞாலி, 2ம் குஞ்ஞாலி, 3ம் குஞ்ஞாலி மற்றும் 4ம் குஞ்ஞாலி என்று குஞ்ஞாலி மரைக்காயர் பதவியை நால்வர் வகித்தனர். மரக்கலம் என்பதைத் தழுவி மரைக்காயர் என்று அழைக்கப்பட்டனர்.

16 ஆம் நூற்றாண்டில் கேரள நாட்டில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்ஞாலி மரைக்காயர் என்று போற்றப்பட்டனர். இவர்கள், போர்ச்சுக்கீசியர்களுக்கு எதிராக போரிட்டனர்.

இவர்களில் வீர, தீரம் கொண்டவராக கருதப்பட்டவர் 4ஆவது குஞ்ஞாலி மரைக்காயர். தற்போது இவரது வாழ்க்கையை மையப்படுத்தி மரைக்காயர் அரப்பிக்கடலிண்டே சிம்ஹம் என்ற படம் தயாராகி வருகிறது.

இதில், குஞ்ஞாலி மரைக்காயர் என்ற ரோலில் மோகன்லால் நடித்து வருகிறார். இவருடன் இணைந்து மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், அர்ஜூன், சுனில் ஷெட்டி ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. வரும் 26 ஆம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஆர்ச்சா என்ற ரோலில் நடித்துள்ளார்.

இந்த கதாபாத்திரத்திற்காக கேரளத்து பாரம்பரிய உடையுடனும், வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடனும் தோற்றமளிக்கிறார்.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சாமுத்திரி மண்ணிற்கு அத்துமீறி வரும் பரங்கியர்களை எதிர்த்து போரிடும் மாவீரன் குஞ்ஞாலியின் வரலாற்றை இந்த டிரைலர் சிறப்பிக்கிறது.

மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம் டிரைலரில் அர்ஜூன், பிரபு, மோகன் லால், மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி ஆகியோர் அடங்கிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

SOURCER SIVAKUMAR
Previous articleஇந்திய மகளிர் அணி-யைக் கண்டு மிரளும் ஆஸ்திரேலியா
Next article7/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here