மான்ஸ்டர் படத்தோட போஸ்டர் பாத்ததுமே இது ஒரு எலியின் சுட்டித் தனத்தை பற்றிய படம் அப்படின்னு நல்லா தெரிஞ்சிடுச்சு.
எலிய வச்சு பல இங்கிலீஷ் படம் வெளிவந்துடுச்சு. அதில் ஒன்று லிட்டில் ஸ்டுவர்ட் என்ற படம் உலக அளவில் பிரபலம்.
தமிழ்ல சுந்தரா ட்ரவல்ஸ் படத்தில் வடிவேலும் எலியும் சேர்ந்து பண்ணும் ரகளை காமெடிகள் இன்றளவும் பேசப்படும் காமெடி.
எனவே மான்ஸ்டர் படத்தில் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் எந்த மாதிரியான கதையை வைத்து இயக்கி உள்ளார் என ஒரு ஆவல் உருவாகியது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு வித்தியாசமான கதை பின்னணியுடன் வெளிவந்த படம். இந்த படம் பெரியவர்களை ஈர்க்கிறதோ இல்லையோ குழந்தைகளை குதூகலப்படுத்தும்.
படத்தின் ஆரம்பத்திலேயே ஏதோ பேய் உள்ளது போன்ற ஒரு சஸ்பென்சுடன் கதை துவங்கும். போஸ்டரிலேயே எலியின் படம் இருப்பதால் அது எலி தான் என அருகில் இருந்த குழந்தையே கண்டுபிடித்து விட்டது.
எந்த ஒரு உயிரையுமே கொல்லக்கூடாது என நினைக்கும் எஸ்.ஜெ.சூர்யா வீட்டில் ஒரு எலி, தொல்லை கொடுக்கிறது.
ஒன்றை லட்சம் மதிப்புள்ள ஷோபாவை குதறி எடுக்கிறது. வீட்டின் கதைவை கரம்பி ஓட்டை இடுகிறது.
எனவே, அந்த எலியை லாவகமாக பிடித்து ஒரு வழியாக அதைக் கொள்ளாமல் குப்பை வண்டியில் போட்டு அனுப்புகின்றார் சூர்யா.
பல மைல் கடந்து சென்றாலும் மீண்டும் அதே வீட்டிற்கு குப்பை வண்டி மூலமே வந்து சேர்கிறது அந்த எலி.
சொட்டுன்னு அடிச்சி தூக்கி போடுற கரப்பான் பூச்சிய கொல்ல மிஷினா என்கிற பாணியில் ஒரு எலிய கொல்ல இத்தன பேரா என சற்று அழுப்பு தட்டினாலும்,
ஏன் எலி அந்த வீட்டை மட்டுமே மீண்டும் மீண்டும் தேடி வருகிறது என்பதற்கான விடையை கிளைமேக்ஸில் சொன்னதும் ஒரு நல்ல கதை தான் என சொல்லவைத்து விட்டது.
இருப்பினும் எலியின் குறும்புத் தனத்தை இன்னும் கொஞ்சம் காமெடி கலந்து கொடுத்திருந்தால் அதிக அளவில் குழந்தைகளை தியேட்டர் நோக்கி இழுத்திருக்கலாம்.
நாயகியாக வரும் பிரியா பவானி ஷங்கர் சிரித்தே கதையை நகர்த்துகின்றார். கருணாகரனின் சைலென்ட் காமெடிகள் சற்று ஆறுதல்.
நிறைய ஷாட்டுகள் ஒரிஜினல் எலியை வைத்தே மிகவும் நேர்த்தியாக எடுத்துள்ளனர். ஒளிப்பதிவு, இசை, கிராப்பிக்ஸ், சவுண்ட் எபெக்ட்ஸ் என டெக்னிக்கலாக படம் நன்றாக இருந்தது.
இன்னும் திரைக்கதையில் காமெடியைப் புகுத்தி இருந்தால் இந்தப் படம் எல்லோரையுமே குஷிப்படுத்தும் படமாக அமைந்திருக்கும்.
கிளைமேக்ஸ் கொஞ்சம் செண்டிமென்டுடன் முடிந்தது படத்திற்கு பாசிடிவ் விசயமாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் மான்ஸ்டர் குழந்தைகளைப் பயமுறுத்தும் அசுரன்