100 Tamil Movie Review | 100 திரைவிமர்சனம்
100 ஒரு க்ரைம் திரில்லர் படம். அதர்வா ஒரு நல்ல படத்தில் நடித்தவுடன் அடுத்து ஒரு மொக்க படத்தில் நடித்து தன்னுடைய இமேஜை கெடுத்துக்கொள்கிறார்.
செம போத ஆகாதே, பூமராங் படங்களை பார்த்த பின்பு இனி அதர்வா படம் என்றால் கொஞ்சம் யோசித்தே செல்ல வேண்டும் என முடிவு செய்தேன்.
அதே மொக்கை படங்களுக்கு நடுவில் இமைக்கா நொடிகள், 100 ஆகிய நல்ல படங்களையும் கொடுக்கிறார்.
இவர் நம்பி ஓகே சொல்லும் இயக்குனர்கள் கவிழ்த்து விடுவதால் இவருடைய பெயரும் டேமேஜ் ஆகிவிடுகிறது.
நூறு படம் எப்படி?
இயக்குனர் சாம் ஆண்டனின் மூன்றாவது ஹாட்ரிக் ஹிட் படம். டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு என ஜி.வி.பிரகாஷை அறிமுகம் செய்து ஹிட் கொடுத்த இயக்குனர்.
டார்லிங் படம் ஹிட் என்றாலும் எனக்கு அந்தப்படம் பிடிக்காது. 100 படத்திற்கு பிறகு சாம் ஆண்டன் ஒரு எதிபார்ப்பை உருவாக்கும் இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார்.
அதர்வாவை பக்கா ஆக்சன் ஹீரோவாகவும் உருவாக்கி விட்டார். ஒரு லட்சம் போலீஸ் படங்கள் வந்துவிட்டாலும் அதில் புதுமையுடன் கூறினால் மட்டுமே படம் ஓடும்.
அந்த வகையில் 100 படம் நல்ல ஒரு திரில்லர் படமாக வெளிவந்துள்ளது. 112 டைட்டில் கிடைக்கவில்லையோ என்னவோ 100 என்ற எண் எமர்ஜென்சி கால் நம்பராக மாற்றிவிட்டனர்.
உண்மையில் 112 என்று வைத்திருந்தால் நிறைய பேரிடம் விழிப்புணர்வு கிடைத்திருக்கும். உண்மையில் மொபைல் லாக் ஆகி இருந்தாலோ, சிம் இல்லை என்றாலோ 112 என்ற எண்ணை மட்டுமே அழைக்க முடியும்.
படம் வழக்கம் போல் ஹீரோ, ஹீரோ பிரண்டு, ஹீரோயின் என ஆரம்பிக்கிறது. ஹீரோவின் நண்பரை அடித்தவரை அடிக்கப்போகும் போது, போலீஸ் அப்பாயின்மென்ட் ஆர்டர், அடி தடி, பாட்டு என்ன முதல் ஹியரில் சென்ற படத்தை டாப் கியரில் தூக்கிவிட்டார்.
அங்கு ஆரம்பித்த வேகம் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் அடித்து படத்தை கிளைமேக்ஸ் வரை ரசிக்க வைக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு யோகி பாபு காமெடிகள் சிரிக்க வைக்கிறது.
ஹன்சிகா படத்தில் உப்புக்கு சப்பா கேரக்டர் தான். தங்கையாக நடித்த ஹரிஜாவின் படம் இந்த வாரம் இரண்டு வெளியாகிவிட்டது.
mr.லோக்கல் மற்றும் 100. ஹீரோயின் ஹன்சிகாவை விட ஹரிஜாவிற்கு நல்ல கதாப்பாத்திரம் கிடைத்துள்ளது.
கடைசியாக வில்லன் கதாப்பாத்திரம் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட் என்றாலும் இந்த மூஞ்சி அதுக்கு எல்லாம் ஒர்த் இல்லை என சற்று சலிப்பு தட்டியது.
ராதா ரவியின் பிஸ்டல் கிளைமேக்ஸில் அந்தக் குறை பெரிய சலிப்பை தரவில்லை. மொத்தத்தில் 100, 100% ரசிக்க வைக்கும் படம்.