Home சினிமா கோலிவுட் லாக்டவுனில் வீட்டிலிருந்தே நடித்து நயன்தாரா!

லாக்டவுனில் வீட்டிலிருந்தே நடித்து நயன்தாரா!

368
0
Nayanthara Ad Films

Nayanthara Ad Films; லாக்டவுனில் வீட்டிலிருந்தே நடித்து நயன்தாரா! லேடி சூப்பர்ஸ்டார் வீட்டில் இருந்தபடியே லாக்டவுனிலும் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லாக்டவுன் காலத்திலும் நயன்தாரா வீட்டில் இருந்தே நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. மற்ற நடிகைகளை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்கிறார்.

கடைசியாக நயன்தாரா நடிப்பில் பிகில் மற்றும் தர்பார் ஆகிய இரு படங்கள் வெளியானது. இரு படங்களுக்குமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது, நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது. தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக நயன்தாரா வீட்டிலேயே இருக்கிறார்.

கொரோனா காரணமாக வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், அண்மையில், நயன்தாராவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக வதந்தி பரவியது. இதற்கு காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து நயன்தாரா முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில், வீட்டில் இருந்தபடியே விளம்பர படத்தில் நடித்துள்ளார். வீட்டிலேயே விளம்ப படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளனர். மேலும், சில விளம்பர படங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Previous articleஇந்த நாடுகளில் தளபதி விஜய்யின் பிகில் ரீ-ரிலீஸ்!
Next articleதல அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here