உதவி இயக்குனரை ஆள் வைத்து தாக்கிய நயன்தாரா
நயன்தாராவின் வாழ்கையை காதல் தோல்விக்கு முன், காதல் தோல்விக்குப்பின் என இரு வகையாகப் பிரித்துக்கொள்ளலாம்.
காதல் தோல்விக்கு முன் நயன்தாரா எல்லோருடனும் சகஜமாகவே பழகுவார். எல்லோர் மீதும் அன்பு செலுத்துவார்.
ஆனால் அவரின் காதல் தோல்விக்குப்பின் அநேக நபர்களை அவர் தவிர்த்துவிட்டார். அவர் செய்யும் நல்ல காரியரியங்கள் எப்பொழுதும் போலவே நடைபெற்று வருகிறது.
ஆனால், நயன்தாராவின் பழைய வாழ்க்கையில் காசப்பான சம்பவங்களை நிகழ்த்திய நடிகர்கள், இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் என எவருடனும் பேசுவதைக்கூடத் தவிர்த்து விடுவார்.
இப்படி ஒரு நிலையில் நயன்தாராவின் பழைய படங்களில் பணியாற்றிய உதவி இயக்குனர் ஒருவர் நயன்தாராவை சந்திக்க நினைத்துள்ளார்.
நயன்தாராவை படப்பிடிப்பு தளம், கடைத் திறப்பு விழா இதுபோன்ற இடங்களில் மட்டுமே பார்க்க முடியும்.
அங்கும் எப்போதும் அவருக்கு பவுன்சர்கள் பாதுகாப்புடன் இருப்பார்கள். இதனால் அந்த உதவி இயக்குனர் பவுன்சர் போன்று கருப்பு உடை அணிந்து நயன்தாராவை சந்தித்துள்ளார்.
பவுன்சர்கள் போன்றே வேடமிட்டு நயனதாரவை பார்த்து ஹாய் சொல்லிவிட்டு உங்ககிட்ட ஒரு கதை சொல்லணும் எனக் கூறியுள்ளார்.
நயன்தாராவும் அவரை ஒரு நிமிடம் அதிர்ச்சியுடன் பார்த்துவிட்டு போனில் எதோ டைப் செய்துள்ளார். கதை கேட்கத்தான் தயாராகிவிட்டார் என கதை சொல்லத் துவங்கியுள்ளார்.
பின்னால் இருந்த ஒருவர் அந்த உதவி இயக்குனரின் காலரைப் பிடித்து இழுத்து தூக்கி வெளியில் வீசியுள்ளனர். பின்புதான் அவருக்குப் புரிந்தது போனில் பவுன்சருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார் என்று.
எத்தனையோ புதுமுக இயக்குனருக்கு வாய்பளித்த நயன்தாராவே தன்னுடன் ஏற்கனவே படபிடிப்பில் அறிமுகமான ஒரு உதவி இயக்குனரை பவுன்சர்களை கொண்டு விரட்டுகிறார் என்றால் நிச்சயம் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும்.
அந்த உதவி இயக்குனரால் நயன்தாரா நிச்சயம் பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும் என விஷயமறிந்தவர்கள் கூறியுள்ளனர்.