Home விளையாட்டு யோ யோ டெஸ்ட்: அலறும் சென்னை சூப்பர் கிங்ஸ்

யோ யோ டெஸ்ட்: அலறும் சென்னை சூப்பர் கிங்ஸ்

364
0
யோ யோ டெஸ்ட்

யோ யோ டெஸ்ட்: அலறும் சென்னை சூப்பர் கிங்ஸ்

வீரர்களின் உடல் தகுதி சரியாக உள்ளதா என யோ யோ டெஸ்ட் (Yo-Yo Endurance Test) செய்வது சமீப காலமாக நடைமுறையில் உள்ளது.

இந்திய அணி வீரர்களை தேர்வு செய்யும்போது யோயோ டெஸ்ட் மூலமே வீரர்கள் விளையாடுவது உறுதியாகிறது.

ஐபில் போட்டிகளில் கலந்துகொள்ளும் அணிகள் அனைத்தும் யோயோ டெஸ்ட் செய்து முடித்துவிட்டனர்.

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் மட்டும் இன்னும் யோயோ டெஸ்ட் செய்யவில்லை.

காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ளவர்கள் அனைவரும் வயது அதிகமானவர்கள்.

எனவே, யோயோ டெஸ்ட் செய்தால் நிச்சயம் பிட்னஸ் குறைபாடு ஏற்படும். இதனால் யோயோ டெஸ்ட் செய்து எங்கள் அணி வீரர்களை சங்கடப்படுத்த விரும்பவில்லை என ஸ்டீபன் பிளமிங் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

சென்ற ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது தாத்தா அணி, டாடி அணி, கிழட்டு அணி என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மற்ற அணி ரசிகர்கள் கிண்டலடித்தனர்.

ஆனால் இறுதியில் கோப்பையை வென்றது சிஎஸ்கே அணி தான். எனவே யோயோ டெஸ்ட் எல்லாம் பெரிய விசயமே இல்லை என கருதியுள்ளனர்.

இன்னும் தோனி அதே வேகத்தில் தான் ஓடுகின்றார். பிட்னஸ் எல்லாம் மூட்டை கட்டிவிட்டு களத்தில் இறங்கி தெறிக்கவிட காத்துள்ளது சிஎஸ்கே.

Previous articleGoogle Doodle Today: ஜோஹன் செபாஸ்டியன் பாக் பிறந்த தினம்
Next articleஉதவி இயக்குனரை ஆள் வைத்து தாக்கிய நயன்தாரா
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here