Home தொழில்நுட்பம் Google Doodle Today: ஜோஹன் செபாஸ்டியன் பாக் பிறந்த தினம்

Google Doodle Today: ஜோஹன் செபாஸ்டியன் பாக் பிறந்த தினம்

593
0
Google Doodle Today

Google Doodle Today: ஜோஹன் செபாஸ்டியன் பாக் பிறந்த தினம்

ஓவ்வொரு நாளின் சிறப்புகளை அடையாளம் காணும் விதமாக கூகுள் டூடுல் என்ற புதுவித முயற்சியை கூகுள் உருவாக்கி உள்ளது.

இதன் மூலம் அந்த நாளின் சிறப்புகளை லோகோவாக வடிவைமைத்து google.com இணைய தளத்தில் வெளியிட்டு வருகிறது.

இன்று (22/03/2019) கூகுள் டூடுலில் யோகான் செபாஸ்டியன் பாக் என்ற இசையமைப்பாளரை சிறப்பிக்கும் விதமாக கூகுள் டூடுல் வெளியிட்டு உள்ளது.

யோகான் செபாஸ்தியன் பாக் (ஜோஹன் செபாஸ்டியன் பாக் – Johann Sebastian Bach)

யோகான் செபாஸ்தியன் பாக் (Johann Sebastian Bach) மார்ச் 31, 1685 பிறந்தார் (O.S. 21 March).  28 ஜூலை 1750 இறந்தார்.

இவர் ஒரு ஜெர்மானிய இசையமைப்பாளர் ஆவார். ஆர்கன் இசைக் கருவியை இசைப்பதில் வல்லவர்.

இவருடைய இசை மதம் சார்ந்ததுமாகவும், மதச்சார்பற்றதுமாகவும் இருக்கும். பரோக்காலக் கலையின் அனைத்துவிதமான அம்சத்தையும் ஒன்றிணைத்து முதிர்நிலைக்கு கொண்டு வந்தவர்.

இவர் புதியதாக எந்த இசையையும் உருவாக்கவில்லை. ஏற்கனவே வீட்டப்பட்ட ஜெர்மானிய இசையை வலுவான இசை நுட்பங்கள் வாயிலாக வளம்படுதினார்.

19 ஆம் நூற்றாண்டின் மீண்டும் இவரது இசை குறித்து மக்களிடம் வரவேற்பை பெற்றது.  மேற்கத்திய சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக இவர் அங்கீகரிக்கப்பட்டார்.

AI-powered Doodle ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் பவர்டு டூடுல்

இன்றைய கூகுள் டூடில் வழக்கமானது போன்று இல்லாமல் புதுமையாக உருவாக்கப்பட்டு உள்ளது.

ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகியுள்ளனர்.

யோகான் செபாஸ்தியன் பாக் இசையை நாமே இசையமைத்துக்கொள்ளுவது போன்று இந்த டூடுல் உருவாக்கப்பட்டு உள்ளது.

நேற்று ஹோலி பண்டிகை காரணமாக இந்த டூடுல் இந்தியாவில் பார்க்க முடியவில்லை. எனவே இன்று அதை கூகுள் வழங்கியுள்ளது.

Previous articleதேர்தலுக்கு முன் வெளியாகும் ‘பிரதமர் நரேந்திர மோடி’ வாழ்க்கைப் படம் (BioPic): இது தான் தேர்தல் வியூகமா?
Next articleயோ யோ டெஸ்ட்: அலறும் சென்னை சூப்பர் கிங்ஸ்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here