Home Latest News Tamil தேர்தலுக்கு முன் வெளியாகும் ‘பிரதமர் நரேந்திர மோடி’ வாழ்க்கைப் படம் (BioPic): இது தான் தேர்தல்...

தேர்தலுக்கு முன் வெளியாகும் ‘பிரதமர் நரேந்திர மோடி’ வாழ்க்கைப் படம் (BioPic): இது தான் தேர்தல் வியூகமா?

436
0
pm modi

தேர்தலுக்கு முன் வெளியாகும் ‘பிரதமர் நரேந்திர மோடி’ வாழ்க்கைப் படம் (BioPic): இது தான் தேர்தல் வியூகமா?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை தற்போது படமாகிறது. சந்தீப் எஸ் சிங் தயாரிப்பில் ஓமங்க் குமார் இயக்கத்தில் விவேக் ஒப்ராய் நடிப்பில் உருவாகியுள்ளது.

நரேந்திர மோடியாக விவேக் ஒப்ராய் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி வெளியாக உள்ளது.

நாட்டின் மிக முக்கிய தருணமான நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 11-ம் தேதி முதல் இந்தியாவில் பல கட்டமாக நடைபெற உள்ளது.

இந்நிலையில் நரேந்திர மோடி பயோபிக் படமான ‘பி.எம். நரேந்திர மோடி’ திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகளுக்கு பிறகு திரைக்கு வர இருக்கிறது.

ஆனால் தேர்தல் 11-ஆம் தேதியே தொடங்குவதால், படத்தை ஒரு வாரம் முன்னதாக, அதாவது ஏப்ரல் 5-ல் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

மோடியின் ஆட்சிக் காலமான 2014 முதல் தற்பொழுது வரை இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், மோடியின் இளமை காலம், எப்படி அரசியலுக்குள் வந்தார்? என அனைத்தும் படமாக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன் படத்தை வெளியிட்டால் படம் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும் தேர்தல் முடிவிலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என பல தரப்பில் இருந்து படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Previous articleஒன்ஸ் அபான் அ டைம் இன் ஹாலிவுட் டிரைலர் வெளியானது: குயிண்டன் டாரண்டியோவின் 9வது படம்
Next articleGoogle Doodle Today: ஜோஹன் செபாஸ்டியன் பாக் பிறந்த தினம்
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here