Home Latest News Tamil ஒன்ஸ் அபான் அ டைம் இன் ஹாலிவுட் டிரைலர் வெளியானது: குயிண்டன் டாரண்டியோவின் 9வது...

ஒன்ஸ் அபான் அ டைம் இன் ஹாலிவுட் டிரைலர் வெளியானது: குயிண்டன் டாரண்டியோவின் 9வது படம்

433
0
once upon a time in hollywood

ஒன்ஸ் அபான் அ டைம் இன் ஹாலிவுட் டிரைலர் வெளியானது: குயிண்டன் டாரண்டியோவின் 9வது படம்

குயிண்டன் டாரண்டியோவின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ஒன்ஸ் அபான் அ டைம் இன் ஹாலிவுட்(Once Upon a Time In Hollywood) படத்தின் டிரைலர் இன்று வெளியாகியது.

லியோனர்டோ டி காப்ரியோ மற்றும் பிராட் பிட்  இணைந்து நடிக்கும் இந்தப் படத்தில் நடிகை மர்கோத் ராபி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடந்த வாரம் வெளியான போஸ்டரில் இருவரும் இளமையாக தெரிவதாக ட்விட்டரில் பல்வேறு விமர்சனங்கள் குவிந்தன. அதற்குள் டிரைலர் வெளியாகிவிட்டது.

டிரைலரில் சில பிளாக் அண்ட் ஒயிட் காட்சிகளும் 1960-களில் இருக்கும் லாஸ் ஏஞ்செல்ஸ், டைரக்டர் குயிண்டனுக்கான தனி ஸ்டைலில் டயலாக் டெலிவெரியும் இருந்தது.

1969-ஆம் ஆண்டு மண்சோன் குடும்பத்தில் நடந்த கொலையை மையக்கதையாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

குயிண்டன் டாரண்டியோ இயக்கி ஹார்வி வெயின்ஸ்டன் தயாரிக்காத ஒரே திரைப்படம் இதுதான். சமீபத்தில் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டன் ஹாலிவுட் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சர்ச்சை எழுந்தது.

இதுவே இந்தப் படத்தை அவர் தயாரிக்காததற்கு காரணமாக அமைந்தது. மேலும் 44 வயதான லியோ மற்றும் 55 வயதான பிராட் இரு கதாப்பாத்திரங்களும் கற்பனையாக அமைத்துள்ளனர்.

இந்த வருடம் ஜூலை மாதம் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here