Home சினிமா கோலிவுட் Nerkonda Paarvai: டுவிட்டரில் டிரெண்டாகும் நேர்கொண்ட பார்வை!

Nerkonda Paarvai: டுவிட்டரில் டிரெண்டாகும் நேர்கொண்ட பார்வை!

383
0
Nerkonda Paarvai

Nerkonda Paarvai: நேர்கொண்ட பார்வை டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. அஜித் வழக்கறிஞராக நடித்த படம் தான் நேர்கொண்ட பார்வை.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படம் வக்கீல்சாப் என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.

ஒரே நாளில் அஜித்திற்கு இப்படியெல்லாம் பாராட்டும், புகழும் கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். இன்று காலை அஜித்தின் மகன் ஆத்விக் தனது 6ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

அஜித்தைப் போன்று ஜோதிகாவும் வழக்கறிஞராக நடிக்கிறார். நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கீல்சாப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். இவரது தன்னம்பிக்கை, தைரியம், விடா முயற்சிக்கு என்று ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

நேர்கொண்ட பார்வை – Nerkonda Paarvai

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் நேர்கொண்ட பார்வை. பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வந்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கா இப்படம் உருவாக்கப்பட்டது.

இயக்குநர் ஹெச் வினோத் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்திருந்தார்.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ், ஆண்ட்ரியா தைராங் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்திய இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, தற்போது மீண்டும் இயக்குநர் ஹெச் வினோத் மற்றும் போனி கபூர் காம்பினேஷனில் வலிமை படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

போலீஸ் கதையை மையப்படுத்திய இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்கிறார்.

வக்கீல்சாப் ஃபர்ஸ்ட் லுக்

இது பவன் கல்யாணின் 26ஆவது படம். இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. படத்திற்கு வக்கீல்சாப் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. இன்று அஜித்தின் மகன் ஆத்விக் தனது 6ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு தல ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஆத்விக்கின் 6ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை ரசிகரக்ள் சுவற்றில் சித்திரமாக ஆத்விக்கின் உருவ படத்தை வரைந்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும், பல ரசிகர்கள் அன்னதானம் வழங்கினர். இன்னும் சில ரசிகர்கள் மனிதநேயத்துடன் பலருக்கும் உதவி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோதிகாவிற்கு தல ரசிகர்கள் வாழ்த்து

இது ஒருபுறம் இருக்க, நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் நடித்த கதாபாத்திரத்தைப் போன்று ஜேஜே ப்ரட்ரிக் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்மகள் வந்தாள் படத்தில் ஜோதிகாவும் வழக்கறிஞராக நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இதன் காரணமாக தல ரசிகர்கள் ஜோதிகாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

SOURCER SIVAKUMAR
Previous articleJyothika: அஜித்தை பின்பற்றும் ஜோதிகா!
Next articleடெஸ்ட் தரவரிசை: நியூஸிலாந்து 2வது இடத்திற்கு முன்னேற்றம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here