Pa Ranjtih; வேஷம் கலைஞ்சுபோச்சி – பா.ரஞ்சித் வெளியிட்ட கூத்துக்கலைஞர்களின் ஆவணப்படம்! கொரோனா காலத்தில் அன்றாட பிழைப்புக்கே கஷ்டப்படும் கூத்துக்கலைஞர்களின் வாழ்க்கையை பற்றிய ஆவணப்படம் ஒன்றை இயக்குநர் பா ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.
அன்றாட பிழைப்பை மட்டுமே நம்பி வாழும் மக்கள் குறிப்பாக கூத்துக்கலைஞர்களின் பயணத்தை பற்றிய படம் தான் இந்த வேஷம் கலைஞ்சுபோச்சி என்ற ஆவணப்படம்.
தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர்களில் பா.ரஞ்சித்தும் ஒருவர். உதவி இயக்குநராக சினிமாவில் அறிமுகமானார்.
தகப்பன்சாமி படத்தில் சிவ சண்முகத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்துள்ளார்.
அதன் பிறகு கடந்த 2011 ஆம் ஆண்டு வந்த அட்டகத்தி படத்தின் மூலம் சினிமாவில் தன்னை ஒரு இயக்குநராக அறிமுகம் செய்து கொண்டார். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கார்த்தியின் மெட்ராஸ் படத்தை கொடுத்தார்.
இப்படம் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமாக பேசப்பட்டது. அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களுக்கு கிடைத்த நல்ல வரவேற்பு மூலம் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு பெற்றார்.
ஆம், ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கினார். உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு, வசூல் கொடுக்கவே மீண்டும் ரஜினியுடன் இணைந்து காலா படத்தை கொடுத்தார்.
ஒரு இயக்குநரைத் தொடர்ந்து தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். நீலம் புரோடக்ஷன் மூலம் பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்காக பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டது.
அதன் பிரகு, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தையும் தயாரித்துள்ளார். தற்போது ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் சல்பேட்டா என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் பாக்ஸராக ஆர்யா நடிக்கிறார். அதற்காக ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ஆர்யா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் ஒரு ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குநர் காவிய பிருந்தா இயக்கத்தில் ரஞ்சித் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட குறும்படம் வேஷம் கலைஞ்சுபோச்சி.
கொரோனா லாக்டவுனில், அன்றாட பிழைப்பை மட்டுமே நம்பி வாழும் மக்கள் குறிப்பாக கூத்துக்கலைஞர்களின் பயணத்தை குறிப்பிடும் வகையில், இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படத்தை ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், கூத்தும், கூத்துக் கலைஞர்களின் வாழ்வும்… நெருக்கடிக் காலத்தில் ஓர் பயணம்… ‘வேஷம் கலஞ்சுபோச்சி’ என்று குறிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக ஹலோவில் ரஞ்சித்தின் புதிய ஆவணப்படம் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.