தமிழ் சினிமாவில் நாட்டுப்புற கலைஞரும் நடிகையுமான பரவை முனியம்மா இன்று உடல் நலக்குறைவால் காலமானார்
2003 ஆம் ஆண்டு விக்ரம் நடித்து வெளியான தூள் திரைப்படத்தில் அறிமுகமானவர்தான் பரவை முனியம்மா.
இந்த படத்தில் சிங்கம் போல என்ற பாடலை பாடி தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.
பிறகு தமிழ் சினிமாவில் ஏய், காதல் சடுகுடு, ஜெயசூர்யா, கோவில், தேவதையை கண்டேன், பசுபதி, அரண், ராஜாதிராஜா, பலே பாண்டியா, தமிழ் படம், வீரம், மான் கராத்தே, சவாலே சமாளி போன்ற திரைப்படங்களில் நடித்து இருந்தார்.
இவர் ஒரு நாட்டுப்புற கலைஞரும் ஆவார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இவர் உடல்நிலை சரி இல்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது இவருக்கு எம்ஜிஆர் நல திட்ட அடிப்படையில் இவருக்கு வங்கியில் 6 லட்சம் வைப்புத்தொகை வைக்கப்பட்டது.
2012ம் ஆண்டு கலைமாமணி விருது இவருக்கு அறிவிக்கப்பட்டு 2019ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டது.
நீண்ட நாளாக உடல்நிலை முடியாமல் மருத்துவமனையில் உதவி கேட்டு இவர் இன்று மார்ச் 29 ஆம் தேதி காலமானார்.
இவரது மறைவை கேட்டு தற்போது திரை உலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
1943 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர் தன்னுடைய 76 ஆவது வயதில் இன்று காலமானார்.